Breaking

Sunday, March 14, 2021

தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை - ஏப்.30 வரை அவகாசம் நீட்டிப்பு!

தொலைதூர மற்றும் இணையவழி படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஏப்.30-ம் தேதி வரை நடத்திக்கொள்ள யுஜிசி அவகாசம் அளித்துள்ளது.
வாக்காளர் அட்டை பதிவிறக்கம் செய்ய வசதி...இன்றே கடைசி: ஓட்டுச்சாவடியில் தயார் நிலையில் அதிகாரிகள் இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
வாக்காளர் அட்டை பதிவிறக்கம் செய்ய வசதி...இன்றே கடைசி: ஓட்டுச்சாவடியில் தயார் நிலையில் அதிகாரிகள்
நடப்பு ஆண்டு கரோனா பரவலால் தொலைதூர, திறந்தவெளி மற்றும் இணையவழி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மார்ச் மாதத்துக்குள் நடத்திமுடிக்க உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டிருந்தது. தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, கடந்த மாதம் நடைபெற்ற யுஜிசி 550-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மாணவர் சேர்க்கைக்கான காலஅவகாசம் ஏப்.30-ம் தேதி நீட்டிக்கப்படுகிறது. மேலும், மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை மே 15-ம் தேதிக்குள் யுஜிசிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேநேரம் உரிய அங்கீகாரம் பெற்ற படிப்புகளுக்கு மட்டுமே சேர்க்கை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog