வேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி?! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 01, 2021

1 Comments

வேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி?!

பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகளை வேலை நாட்களில் நடத்த வேண்டும் என இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்றி வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் போராட்டங்களை அலட்சியப்படுத்திய அரசு: 10 ஆண்டுகளாக ஏமாற்றியதாக புகார்
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர் களுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்தல் பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மார்ச் மாதம் முழுவதும் உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் வாரம் முழுவதும் ஓய்வின்றி 31 நாட்களும் பணி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு வினாத்தாள் கசிந்ததால் போட்டித் தேர்வு ரத்து
எனவே, இந்திய தேர்தல் ஆணையம் உரிய நட வடிக்கை எடுத்து தேர்தல் பயிற்சி வகுப்பு களை ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து மற்ற வேலை நாட் களில் ஏதாவது ஒரு நாளில் நடத்த வேண்டும் அல்லது சனிக்கிழமைகளில் பள்ளிக்கு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84654867