712 காலியிடம் - சிவில் சர்வீஸ் பணி - மார்ச் 24 வரை விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 05, 2021

Comments:0

712 காலியிடம் - சிவில் சர்வீஸ் பணி - மார்ச் 24 வரை விண்ணப்பிக்கலாம்

Civil-Service-Job---Can-apply-till-March-24
இந்த ஆண்டுக்கான சிவில் சர் வீசஸ் முதல்நிலைத் தேர்வு ஜூன் 27-ம் தேதி நடக்கிறது. இதற்கு மார்ச் 24 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகையான உயர் பணியிடங்களை நேரடியாக நிரப்பும் பொருட்டு சிவில் சர்வீசஸ் தேர்வு என்ற போட்டித் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அகில இந்திய அளவில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் இத்தேர்வு, முதல்நிலை, முதன்மை, நேர் முகம் என 3 நிலைகளை உள்ளடக்கியது.
.com/blogger_img_proxy/ தேர்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதால் சனி வேலை நாளை ரத்து செய்ய வலியுறுத்தல்
இந்நிலையில், 2021-ம் ஆண்டில் சிவில் சர்வீசஸ் பணிகளில் 712 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி நேற்று வெளியிட்டது. அதன்படி, முதல்கட்ட தேர்வான முதல் நிலைத் தேர்வு ஜூன் 27-ம் தேதி நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். இத்தேர்வுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32. ஓபிசி வகுப்பினருக்கு 35. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 37. மாற்றுத் திறனாளிகளுக்கு 42 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக் கிறது. தேர்வெழுத விரும்பு வோர் யுபிஎஸ்சி இணைய தளத்தை (www.upsc.gov.in) பயன்படுத்தி மார்ச் 24-ம் தேதிக் குள் ஆன்லைனில் விண்ணப் பிக்க வேண்டும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் விவரங் களை யுபிஎஸ்சி இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
.com/blogger_img_proxy/ DSE - தேசிய குடற்புழு நீக்க நாள் - மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - PDF
IMG_20210305_194550

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84633313