யுபிஎஸ்சி, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு உதவி தொகையுடன் இலவச பயிற்சி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 02, 2021

2 Comments

யுபிஎஸ்சி, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு உதவி தொகையுடன் இலவச பயிற்சி!

யுபிஎஸ்சி, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு உதவி தொகையுடன் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகடாமி வெளியிட்ட அறிக்கை: சங்கர் ஐஏஎஸ் அகடாமி, மத்திய சமூக நீதி அமைச்சகம் ஆகியவை இணைந்து எஸ்சி, எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
பொதுத்தேர்வு கட்டணம் செலுத்தாத பள்ளிகள், 5ம் தேதிக்குள் செலுத்த உத்தரவு
தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசு பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிப்பதற்கு சங்கர் ஐஏஎஸ் அகடாமியை மத்திய சமூக நீதி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதற்காக ெசய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு 85 மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும். மாத உதவி தொகையும் உண்டு. தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் இளங்கலை மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு எழுத்து தேர்வும், நேர்முக தேர்வும் நடைபெறும் பின்னர் சான்றிதழ் சரிபார்த்து தகுதியான மாணவர்கள் தேர்வு ெசய்யப்படுவார்கள்.
தமிழகத்தில் நுழைவுத்தேர்வு மூலம் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்த கல்வித் துறை திட்டம்
இதற்கான நுழைவு தேர்வு மார்ச் 19ம் தேதி ஆன்லைனில் நடைபெறும். இதற்காக விண்ணப்பித்தல் மார்ச் 1ம் தேதி(நேற்று) தொடங்கி மார்ச் 10ம் தேதி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 9444166435 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் www.shankariasacademy.com என்ற இணையதளத்தை காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. Great Blog! This post gives a better idea. I hope you will share some more content. Please keep sharing! currently, I am looking for a top IAS academy. Here I got some details. Thanks for sharing useful information.
    IAS Academy in Hyderabad
    Top Ias Coaching In Bangalore
    Best Upsc Coaching In Bangalore
    Upsc Coaching In Bangalore

    ReplyDelete
  2. Thank you for your valuable information. I got more ideas from your blog content. Keep sharing such good content.
    ¿Cuáles son las causales de divorcio en Nueva Jersey?

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews