தமிழக அரசின் 152 துறைக்காக நடைபெற்ற தேர்வுகளின் கீ ஆன்சர் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மார்ச் 24ம் தேதி முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதிரி தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பின்படி 152 துறை தேர்வுகள் 12.2.2021 முதல் 21.2.2021 வரை கொள்குறிவகை மற்றும் விவரித்து எழுதுதல் என்ற பாடத்திட்டத்தின்படி சென்னை உட்பட 33 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றன. இத்தேர்வின் கொள்குறி வகை சார்ந்த 119 தேர்வுகளின் உத்தேச விடைகளை(கீ ஆன்சர்) தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆல் பாஸ் அறிவிக்கப்பட்ட 9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் 12.3.2021 முதல் 18.3.2021 மாலை 5.45 மணி வரை விண்ணப்பதாரர்கள் அவர்தம் தேர்வு நுழைவு சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை அவ்வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.