தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – ஆசிரியர்கள் கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 21, 2021

2 Comments

தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – ஆசிரியர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பள்ளிகள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் மிகவும் தாமதமாக தான் செயல்பட தொடங்கியது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் இன்னும் முழுமையாக நடத்தி முடிக்கப்படவில்லை.

எம்.டெக் படிப்புகளில் இந்த ஆண்டு மத்திய அரசின் இடஒதுக்கீட்டை அண்ணா பல்கலை பின்பற்ற ஐகோர்ட் உத்தரவு

தமிழக அரசு மாணவர்களுக்கான பாடங்களை குறிப்பிட்ட சதவீதம் குறைத்து உள்ளது. பொதுத்தேர்வு நடப்பதற்கு இன்னும் குறைந்த கால அவகாசமே உள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. கோரிக்கை: தேர்தலின் போது பாதுகாப்பு காரணங்கள் மற்றும் வாக்கு சாவடிகளுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். தமிழக அரசு கடந்த 2018ம் ஆண்டு முதல் 11ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை கொண்டு வந்தது. அதற்கு முன்னதாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.

நிரந்தர பணியிடங்கள் உடனே விண்ணப்பிக்கலாம்

இந்நிலையில் நடப்பு ஆண்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு பள்ளிகள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் சார்பாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அதிகாரியின் பதில்:
பள்ளிகளின் ஆசிரியர்கள் பலர், பாடங்களை இன்னும் முழுமையாக நடத்தி முடிக்காமல் உள்ளதால் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயராவதில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கிறது. அதனால் நடப்பு ஆண்டில் பொதுத்தேர்வை 11ம் வகுப்புக்கு ரத்து செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர், தேர்வுக்கான வினாத்தாள் தயாராகி விட்ட நிலையில் பொதுத்தேர்வை ரத்து செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

2 comments:

  1. Please cancel the exam for 11th standard. We have not studied half of the portion itself. Government please cancel the exam.🙏🙏🙏

    ReplyDelete
  2. Cancel 11thstd public exam because teachers have not yet completed the portions. Like for example in maths 2nd volume teaching not started. How can teachers finish the portions and also we need many revision tests and exams before appearing for the public exam with confidence. The government can keep annual exams for 11thstd instead of public exams

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews