தமிழக இடைக்கால பட்ஜெட் – பிப்ரவரி 23ம் தேதி தாக்கல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 17, 2021

Comments:0

தமிழக இடைக்கால பட்ஜெட் – பிப்ரவரி 23ம் தேதி தாக்கல்!

தமிழக சட்டசபையின் இரண்டாம் கூட்டம் வரும் பிப்ரவரி 23ம் தேதி நடக்க உள்ள நிலையில் அன்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

Samagra Shiksha - SPD to All CEOs - Online teacher Development Programme on ICT facilities - Level 2 — schedule for 4 days from 17.2.21 to 20.2.21 - reg

சட்டசபை கூட்டம்:
தமிழகத்தில் 2021ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கியது. இக்கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றினார். மேலும், முதல் கூட்டம் பிப்ரவரி 5ம் தேதியுடன் முடிவடைந்தது. மேலும், 2ம் கூட்டத்தொடர் பிப்ரவரி 22ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் கூட்டம் பிப்ரவரி 23ம் தேதி முதல் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இடைக்கால பட்ஜெட்:
தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்க உள்ள நிலையில் அ.தி.மு.க., அரசால் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இந்நிலையில் வரும் சட்டசபை கூட்டத்தில் தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தமிழக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தேர்தல் வர இருப்பதால் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MSME (Micro, Small and Medium Enterprises) Policy - 2021 - PDF

சட்டசபை செயலாளர்:
இது குறித்து தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் அவர்கள், தமிழ்நாடு சட்ட பேரவையின் அடுத்த கூட்டம் வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு கலைவாணர் அரசிங்கில் உள்ள பல்வகை கூட்டரங்கில் பேரவை தலைவர் நடத்த உள்ளார். மேலும், அன்று 2020-2021ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews