மத்திய ஆசிரியர் தகுதி தேர்வான, 'சிடெட்' தேர்வின் விடைத்தாள் நகல் மற்றும் விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வு, ஜன., 31ல் நாடு முழுதும், 145 நகரங்களில், 3,938 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வில், 23 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களது விடைத்தாளின் ஸ்கேன் நகல்கள் மற்றும் விடைக்குறிப்புகள், நேற்று வெளியிடப்பட்டன. இவற்றை, http://www.ctet.nic.in/ என்ற இணையதளத்தில், நாளை மாலை, 5:00 மணி வரை பார்க்கலாம்.'சிடெட்' தேர்வு இயக்குனர் அனுராக் திரிபாதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விடைத்தாள் நகல் மற்றும் விடைக்குறிப்பை, தேர்வர்கள் தங்கள் பயனர் அடையாள எண் வழியே தெரிந்துக் கொள்ளலாம். விடைத்தாளிலும், விடைக்குறிப்பிலும் மாற்றங்கள் மற்றும் ஆட்சேபனைகள் இருந்தால், இணையதளத்தில் உரிய வகையில் தகவல்களை அனுப்பலாம். தேர்வர்களின் ஆட்சேபம் சரியாக இருந்தால், அவை சரிசெய்யப்படும்; அவர்கள் செலுத்தும் ஆட்சேபனை கட்டணம் திருப்பி அளிக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Search This Blog
Saturday, February 20, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.