43 ஆயிரம் சத்துணவு மையங்களை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் தமிழக அரசு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 22, 2021

Comments:0

43 ஆயிரம் சத்துணவு மையங்களை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் தமிழக அரசு!

தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி உடன் சேர்ந்த 43 ஆயிரம் சத்துணவு மையங்கள் உள்ளன. இதில், 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர் பணியாற்றி வருகின்றனர். இந்த மையத்தில் 58 லட்சம் குழந்தைகள் சாப்பிடுகின்றனர். 13 வகை உணவு வகை கொடுக்கப்படுகிறது. தினமும் ஒரு முட்டை கொடுக்கப்படுகிறது. இந்த சத்துணவு மையத்தை தனியாருக்கு கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் இந்த அரசு செயல்படுகிறது. அதை நாங்கள் ஏற்கவில்லை. இந்த நிலையில், 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள மையங்களை மூடி வருகின்றனர்.
திறந்தநிலை பல்கலையில் தமிழ் வழியில் 80 பட்ட படிப்பு
ஆனால், 25 கீழ் உள்ள மையங்களில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆனால், சத்துணவு ஊழியர்களை மட்டும் காலி செய்கின்றனர். பக்கத்து மையத்தில் இருந்து சமையல் செய்து கொண்டு வர வேண்டும் என்று கூறுகின்றனர். இதை கண்டித்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதன்பிறகு சத்துணவு மையங்களை மூட மாட்டோம் என்று அரசு தெரிவித்தது. ஆனால், தற்போது சத்துணவு மையங்களில் உள்ள காலி இடத்தை நிரப்பாமல், இந்த மையங்களை படிப்படியாக மூடி வருகின்றனர். இப்படி சத்துணவு மையங்களை மூடினால், அந்த பள்ளி அருகில் மற்றொரு மையம் இருந்தால் பரவாயில்லை. அதே நேரத்தில் 2 கி.மீ, 3 கி.மீக்கு தள்ளி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இந்த மாதிரி இருக்கும் போது, சூடான சாப்பாட்டை பாதுகாப்பாக கொணடு போவதால் பல்வேறு பாதிப்புகள் உள்ளது. இங்கிருந்து பொருட்களை கொண்டு போக ஆட்டோ இருந்தால் பரவாயில்லை. தலையில் சுமந்தபடி செல்வது என்பது மிகவும் சிரமமான காரியம். சென்னையை பொறுத்தவரையில் ஒரு ஏரியாவில் பள்ளி இருக்கும். எங்கிருந்தோ இருக்கும் மையத்தில் இருந்த சாப்பாட்டை சரியான நேரத்திற்கு எடுத்த வர மிகவும் கஷ்டப்படுகின்றனர். சத்துணவு திட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டதோ அதனை மறந்து விட்டு குழந்தைகள் குறைவாக இருப்பதாக கூறி இப்படி மையங்களை மூடுவது இதை கொண்டுவந்த நோக்கங்களுக்கு எதிரானது.
பணிமாறுதல் செய்யாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு: தொடக்கக்கல்வி துறையில் சலசலப்பு
சத்துணவு மையங்களில் 40 ஆயிரம் பணியிடங்கள் இன்று வரை காலியாக உள்ளன. சத்துணவு மையங்களில் காலி பணியிடங்களை நிரப்புகிறோம் என்று அரசு கூறுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர்களிடம் கேட்கும் போது, மேலிடத்தில் இருந்து சொன்னால் தான் போடுவோம் என்று கூறுகின்றனர். ஆனால், இயக்குனர் நான் ஏற்கனவே உத்தரவு போட்டு விட்டேன் என்கிறார். இதில், யார் சொல்வது உண்மை என்று தெரியவில்லை. இரண்டு பக்கமும் இழுத்தடித்து வருகின்றனர். அட்சயபாத்திரம் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பொறுத்தவரை தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் காலை சாப்பாடு பள்ளிகளுக்கு தருவார்கள். நாங்கள் மதியம் சாப்பாடு தர வேண்டும் என்று கூறுகின்றனர். எங்களுக்கு அரசு தரும் நிதியை வைத்து தான் நாங்கள் சாப்பாடு போட முடியும். ஆனால், காலையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தரமாக தருகின்றனர். இதன் மூலம் நாளடைவில் சத்துணவு மையங்கள் மூலம் சரியாக சாப்பாடு தருவதில்லை. தனியார் மூலம் நன்றாக செய்கின்றனர் என்பது போன்ற வித்தியாசத்தை ஏற்படுத்தவே இப்படி செய்கின்றனர். தமிழக கவர்னர் இந்த திட்டத்தை தொடக்கி வைத்தபோது, மதிய உணவையும் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.
பணிமாறுதல் செய்யாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு: தொடக்கக்கல்வி துறையில் சலசலப்பு
தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் காலை சாப்பாடு அந்த மாதிரி கொண்டு போகும் போது சத்துணவு என்பது தனியாரிடம் நேராக சென்று விடுகிறது. தொண்டு நிறுவனம் கொடுக்கும் உணவில் முட்டை சாப்பிடக்கூடாது. இஞ்சி, பூண்டு சேர்க்க கூடாது. தாளிக்க கூடாது என்கின்றனர். இஞ்சி, பூண்டு மாணவர்களின் ஆரோக்கியத்திற்காக சேர்க்கிறோம். ஆனால், அவர்கள் தரும் சாப்பாட்டில் அதை சேர்க்க கூடாது. இப்படி இருந்தால், அந்த சாப்பாட்டை சாப்பிடும் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. அந்த மாதிரி விஷயத்தை தான் நாங்கள் எதிர்க்கிறோம். ஒரு இடத்தில் சமையல் செய்து அதை அனைத்து இடங்களுக்கும் கொண்டு போகின்றனர்.
திறந்தநிலை பல்கலையில் தமிழ் வழியில் 80 பட்ட படிப்பு
அவ்வாறு கொண்டு செல்லும் போது பிரச்சனை அதிகம். ஒரு மையத்தில் சாப்பிடும் குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை என்றால், அந்த மையத்தில் 10 குழந்தைகளை மட்டும் தான் பாதிக்கும். ஆனால், ஒரே இடத்தில் 1000 பிள்ளைகளுக்கு சமையல் செய்து கொண்டு செல்வதில் எதாவது பாதிப்பு ஏற்பட்டால் அனைத்து குழந்தைகளுக்கும் அந்த பாதிப்பு இருக்கும். இதையெல்லாம் அரசாங்கம் யோசிப்பது கிடையாது. சத்துணவு மையங்களுக்கு முறையான நிதி தருவதில்லை. ஏதோ ஒரு தொகை தருகின்றனர். அந்த நிதியை வைத்து தான் முடிந்த அளவு தரமான உணவு நாங்கள் தருகிறோம். சத்துணவு மையத்தில் வெஜிடபிள் பிரியாணி போடச் சொல்கின்றனர். 100 பேருக்கு 10 கிலோ அரிசிக்கு காய்கறியோடு போடும் போது 300 கிராம் எண்ணெய் பற்றாது. அதே போன்று பிரியாணிக்கு காய்கறிக்கு கொடுக்கும் விலை குறைவாக உள்ளது. மிளகு முட்டை தர சொல்கின்றனர். இவர்கள் கொடுக்கும் காசில் மிளகு வாங்க முடியவில்லை. கேஸ் சிலிண்டருக்கு பற்றாத நிலைமை தான் உள்ளது. ஒரு சிலிண்டர் ரூ.750 வந்து விட்டது. இவர்கள் ரூ.326 சிலிண்டருக்கு தருகின்றனர். இது போதுமானதாக இல்லை.
திறந்தநிலை பல்கலையில் தமிழ் வழியில் 80 பட்ட படிப்பு
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் போது, சத்துணவுக்கு 75 சதவீதம் மத்திய அரசும், 25 சதவீதம் மாநில அரசு செலவு செய்தது. ஆனால், தற்போது, மத்திய அரசு 25 சதவீதம், மாநில அரசு 75 சதவீதம் போடுவதால் தான் சத்துணவு சாப்பாட்டிற்கான மானியத்தை அதிகப்படுத்தாமல் உள்ளனர். இன்றைக்கு கிராமங்களில் சத்துணவு சாப்பாட்டை தான் எதிர்பார்க்கின்றனர். எனவே, அந்த மாணவர்களுக்கு தரமான சாப்பாடு கிடைக்க நிதியை கூடுதலாக தர வேண்டும். 5 முட்டையை தருகின்றனர். வாரத்திற்கு 3 முட்டை தரலாம். 2 முட்டை காசை மசாலா மற்றும் இதர செலவுகளுக்கு பயன்படுத்த முடியும். மாணவர்களுக்கு உணவு செலவை அதிகப்படுத்த வேண்டும்.
திறந்தநிலை பல்கலையில் தமிழ் வழியில் 80 பட்ட படிப்பு
சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியம் கூட தரவில்லை. நாங்கள் இது குறித்து கேட்டால் நிதி நெருக்கடி என்று கூறுகின்றனர். எங்களில் 10 வருடம், 20 வருடம், 30 வருடம் முடித்தவர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்து தர வேண்டும் என்று கேட்டோம். ஆனால், அதை செய்யவில்லை. மேலும், எங்களது ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் தருகின்றனர். ஒரு நாளைக்கு 66 தான் வருகிறது. இதை வைத்து வாழ்க்கை நடத்த முடியுமா என்பது தான் கேள்விக்குறியான விஷயம். அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் தருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கிராஜூவிட்டி தருகின்றனர். ஆனால், சத்துணைவு அமைப்பாளர்களுக்கு ரூ.1 லட்சம், சமையலர்களுக்கு ரூ.50 ஆயிரம் தான் தருகின்றனர். நாங்கள் ரூ.5 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் தர வேண்டும் என்று கேட்கிறோம். சத்துணவு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே சத்துணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று கூறுகிறோம். இது தொடர்பாக தொடர்ச்சியாக போராடி வருகிறோம். இதையடுத்து தான் அமைச்சர் எங்களை அழைத்து பேசினார். அப்போது உங்களது கோரிக்கையை முதல்வர் தான் நிறைவேற்ற முடியும். என்னால் ஒன்று செய்ய முடியாது என்று கூறி கைவிரித்து விட்டார். முதல்வர் எடப்பாடி உங்களை அழைத்து பேசுவார் என்று அமைச்சர் கூறினார். ஆனால், அமைச்சரை கூட மீண்டும் எங்களால் சந்தித்து பேச முடியவில்லை. முதல்வராக ஜெயலலிதா இருந்த போது அடுத்து அரசு ஊழியர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யும் போது உங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தார்.
பணிமாறுதல் செய்யாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு: தொடக்கக்கல்வி துறையில் சலசலப்பு
ஆனால், ஊதிய நிர்ணய குழு எங்களது கோரிக்கையை பரிசீலனையில் கூட எடுத்து கொள்ளவில்லை. இயக்குனர், அமைச்சர் எங்களது கோரிக்கையை கொண்டு செல்வதாக கூறுகின்றார்கள். ஆனால், அவர்கள் கொண்டு போவதில்லை. நாங்கள் ஏதாவது ஒரு சமயத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்றால் அப்போது உங்களது கோரிக்கை என்னவென்று மீண்டும் கேட்கின்றனர். இப்படித்தான் சத்துணவு ஊழியர்களின் நிலை உள்ளது. சத்துணவு மையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இந்த அரசு இறங்கியுள்ளது. இதன் பின் விளைவு அவர்களுக்கு தெரியவில்லை. நாங்களே காலை உணவு செய்து தருகிறோம். அதற்காக நிதியை தாருங்கள் என்று கேட்கிறோம். ஆனால், அரசு எங்களது கோரிக்கைக்கு செவி கொடுக்காமல் உள்ளது. தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க முனைப்பு காட்டி வருகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews