Breaking

Friday, February 05, 2021

அரசுக் கல்லூரிகளில் தற்காலிக பணியிடங்கள்: நீட்டிப்பு வழங்க முடிவு.

அரசுக் கல்லூரிகளில் தற்காலிக பணியிடங்களுக் கான கால வரையறையை 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க கல்லூரி கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல் பட்டு வருகின்றன. இவற்றில் கூடுதலாக உருவாக்கப்பட்ட தற்காலிக பணியிடங்களில் 4775 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கான பணிக்காலம் மார்ச் மாதத்துடன் முடியவடைகிறது. இதையடுத்து தற்காலிகபணியிடங்களுக்கான கால வரையறையை 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க கல்லூரி கல்வி இயக்குநரகம் முடிவுசெய்துள் ளது. இதற்கான கருத்துரு உயர்கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டு உள் ளதாகவும், ஒப்புதல் கிடைத்தபின் அறிவிப்பு வெளியிடப்படும் என வும் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog