நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் முறைகேடு புகார்!: சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு தேசிய தேர்வு முகமை எதிர்ப்பு.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 09, 2021

Comments:0

நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் முறைகேடு புகார்!: சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு தேசிய தேர்வு முகமை எதிர்ப்பு..

நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் முறைகேடு புகாரில் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு தேசிய தேர்வு முகமை எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அக்டோபர் 5 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள்களில் முறைகேடு என கோவை மாணவர் வழக்கு தொடுத்திருந்தார். இதில் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு தேசிய தேர்வு முகமை தற்போது எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய கோவையை சேர்ந்த மனோஜ் என்ற மாணவர், நீட் தேர்வில் முதலில் மதிப்பெண் பதிவேற்றம் செய்யப்பட்டபோது 594 மதிப்பெண்கள் என்றும் 10 நாட்கள் கழித்து பதிவேற்றம் செய்யப்பட்ட ஓ.எம்.ஆர். விடைத்தாளில் 248 மதிப்பெண்கள் என்றும் பதிவாகி இருந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நீட் தேர்வை நடத்தும் தேர்வு முகமையே முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறது. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். ஏற்கனவே பதிவிடப்பட்ட மதிப்பெண்களை கருத்தில் கொண்டு தனக்கு மருத்துவ படிப்பிற்கு இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது என்று நீதிபதி புகழேந்தி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், மாநில அல்லது சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்தால் ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுடைய பிரதிநிதிகளையே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்த வாய்ப்பிருக்கிறது. எனவே நேஷனல் இன்பர்மேடிக் சென்டரை ஒரு உறுப்பினராக கொண்டு அவர்கள் விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேநேரம் தேசிய தேர்வு முகமை தரப்பில், இதுபோன்ற விவகாரத்தில் விசாரணை குழு விசாரணைக்கு உத்தரவிட்டால் முகமையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் வகையில் இருக்கும். முகமை மீதான பின்பதை தவறாக சித்தரிக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கை பிப்ரவரி 18ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறார். அச்சமயம் தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசின் தரப்பின் எழுத்துபூர்வமான வாதங்களை வழக்கில் தாக்கல் செய்ய அறிவுறுத்தியிருக்கிறார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews