கனரக வாகன ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 22, 2021

Comments:0

கனரக வாகன ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி?

கனரக ஓட்டுநர்கள் விபத்தினால் இறந்தாலோ, ஊனமுற்றாலோ அவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனரக வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கனரக வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர் விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகன ஓட்டுநர்கள் உள்ளார்கள்.
Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) - 2019 - PUBLIC NOTICE - Two Member Committee
அவர்களின் ஓட்டுகளும், அவர்களின் குடும்ப ஓட்டுகளும் அரசியலில் மாற்றத்தை தீர்மானிக்கக் கூடியதாக உள்ளது. கனரக வாகன ஓட்டுநர்களுக்கு என்று தனி நலவாரியம் அமைக்க வேண்டும். மத்திய, மாநில பட்ஜெட்டில் தனி நிதி ஒதுக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர்கள் தொழில் நிமித்தமாக ஏற்படும் விபத்தில் படுகாயமடைந்தால், சுயதொழில் தொடங்க இலவச கடன் கொடுக்க வேண்டும். கனரக ஓட்டுநர்கள் விபத்தினால் இறந்தாலோ, ஊனமுற்றாலோ அவர்களின் குழந்தைகளுக்கு மெட்ரிக், சிபிஎஸ்இ, தொழில் கல்வி, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள், மருத்துவ கல்விகளில் இலவச கல்வி வழங்க வேண்டும். பிற அமைப்புசாரா தொழிலாளர்கள் போன்று கனரக வாகன ஓட்டுனருக்கும் உரிய நிவாரணம், பரிசுப்பொருட்கள் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். தொழில் நிமித்தமாக மாநிலம் விட்டு மாநிலம் வாகனம் ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்களுக்கு உரிய பாதுகாப்பும் நலனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews