2020-2021ம் கல்வி ஆண்டில் 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் : முதல்வர் பழனிசாமி அடுத்த சரவெடி.. செம குஷியில் மாணவர்கள்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 25, 2021

Comments:0

2020-2021ம் கல்வி ஆண்டில் 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் : முதல்வர் பழனிசாமி அடுத்த சரவெடி.. செம குஷியில் மாணவர்கள்!!

அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு
2020-2021ம் கல்வி ஆண்டில் 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று சட்டப்பேரவையில் 110 விதிகளின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 10ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிற மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடம் நடத்தப்பட்டு வருகின்றன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. இதையடுத்து 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகள் குறித்து மாணவர்களும் அசிரியர்களும் கேள்வி எழுப்பி இருந்தனர். 10,11 மாணவர்களுக்கு நடப்பு ஆண்டில் பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். அந்த ஆலோசனையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் இன்று முதல்வர், பொதுத்தேர்வின்றி 9.10.11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவித்தார்.
தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி 28க்குள் முடிக்க உத்தரவு!
9, 10, 11 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews