பசு அறிவியல் தேர்வு - யு.ஜி.சி., உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 18, 2021

Comments:0

பசு அறிவியல் தேர்வு - யு.ஜி.சி., உத்தரவு

'தேசிய அளவில் நடக்கும், &'பசு அறிவியல்&' தேர்வில் பங்கேற்க, மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்&' என, அனைத்து பல்கலை துணை வேந்தர்களுக்கும், யு.ஜி.சி., எனப்படும், மத்திய பல்கலைக்கழக மானியக் குழு கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய அரசு, 2019ல், பசுவின் பயன்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், &'ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்&' என்ற ஆணையத்தை ஏற்படுத்தியது. இந்த ஆணையம், வரும், 25ம் தேதி, நாடு முழுதும் &'ஆன்லைன்&' வாயிலாக, பசு அறிவியல் தேர்வு நடத்த உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் புதிய வேளாண் கல்லூரி: தமிழக அரசு அரசாணை வெளியீடு

இது குறித்து, பல்கலை மானியக் குழு செயலர் ரஜனிஷ் ஜெய்ன் கூறியதாவது: அறிவியல், சுற்றுச்சூழல், ஆரோக்கியம், வேளாண், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு, பசு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. பால் சுரப்பு நின்ற பிறகும், பல வகைகளில் மக்களுக்கு பயன்பட்டு வருகிறது. பசு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆன்லைன் வாயிலாக, 25ம் தேதி, பசு அறிவியல் தேர்வு நடத்தப்பட உள்ளது.

பிப்.,28 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

இதில் பள்ளி, கல்லுாரி, பல்கலை மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். பொது மக்களும் இத்தேர்வில் பங்கேற்கலாம். இத்தேர்வுக்கு கட்டணம் ஏதும் கிடையாது. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட, 11 மொழிகளில் தேர்வு நடக்கும். இந்த தேர்வில் பங்கேற்க மாணவர்களை ஊக்குவிக்கும்படியும், ஊடகங்களில் விளம்பரங்கள் செய்யும்படியும், அனைத்து பல்கலை துணை வேந்தர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews