2020ம் ஆண்டு நடந்த யூ.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வுகளை தவறவிட்டவர்களுக்கு வாய்ப்பு அளித்தது போல் வயது வரம்பில் ஒரு ஆண்டு கூடுதல் வாய்ப்பு அளிக்க முடியுமா என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வு:
கடந்த ஆண்டு 2020ல் அக்டோபர் மாதம் யூ.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடைபெற்றது. கொரோனா தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கினால் தேர்வை எழுத முடியாதவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அக்டோபர் 26ம் தேதி வழக்கு தொடரப்பட்டது. பல கட்டங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த 5ம் தேதி தேர்வை தவறவிட்டவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும், தேர்வு வாரியம் அறிவித்திருந்த வயது வரம்புக்குள் உள்ளவர்களுக்கு மட்டும் மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.
வயது வரம்பு:
இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நீதிமன்றத்துக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2020ம் ஆண்டு ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் தங்களது கடைசி வாய்ப்பை பயன்படுத்திய, உச்ச வயது வரம்பை மீறாதவர்களுக்கு நடப்பு ஆண்டு தேர்வில் கூடுதலாக வாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இப்போது உச்ச வயது வரம்பை கடந்திருந்தாலும் அவர்களுக்கும் ஒரு முறை கூடுதல் வாய்ப்பு அளிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்யலாம் என்று கூறி உள்ளனர்.
Tuesday, February 09, 2021
UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் வயது வரம்பு தளர்வு – உச்சநீதிமன்றம் கேள்வி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.