2021 ஜேஇஇ பிப்ரவரி மாத முதல்நிலைத் தேர்வு – நுழைவுச் சீட்டு வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 13, 2021

Comments:0

2021 ஜேஇஇ பிப்ரவரி மாத முதல்நிலைத் தேர்வு – நுழைவுச் சீட்டு வெளியீடு

2021 ம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலை தேர்வுகள் இந்த மாதம் 23ம் தேதி முதல் 26 வரை நடக்க உள்ள நிலையில் இதற்கான நுழைவுச்சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை: தேசிய தேர்வு முகமை 2021ம் ஆண்டுக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வை நடப்பு ஆண்டு முதல் நான்கு கட்டங்களாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடத்த உள்ளது. மாணவர்கள் தங்கள் விருப்பம் போல் தேர்வில் ஒரு முறையில் இருந்து நான்கு முறை வரை கலந்து கொள்ளலாம். தேர்வில் மாணவர் எடுத்துள்ள அதிகபட்ச மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்படும். தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கு தேர்வின் மதிப்பெண் பயன்படுத்தப்படும்.

ஜேஇஇ முதல்கட்ட தேர்வு:
பிப்ரவரி மாத தேர்விற்கு 6.60 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நான்கு கட்டங்களுக்கும் சேர்த்து 21.75 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இத்தனை ஆண்டுகளில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். பிப்ரவரி மாத முதல் கட்ட தேர்வுகள் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்க உள்ளது. நுழைவுச் சீட்டு வெளியீடு:
தேர்வுக்கான விண்ணப்ப பதிவு டிசம்பர் 16ம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 23ம் தேதி வரை நடந்தது. தற்போது தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கும் மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரியில் தங்கள் விவரங்களை செலுத்தி தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் (0120- 6895200) என்ற தொலைபேசி எண்ணிலும் அல்லது jeemain@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு நுழைவுச் சீட்டு தபால் வழியில் அனுப்பி வைக்கப்பட மாட்டாது என்று தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews