இந்திய பார் கவுன்சில் 2022 – 2023ம் ஆண்டு முதல் எல்.எல்.எம்., என்னும் ஓராண்டு முதுகலை படிப்பை ரத்து செய்ய இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இந்திய பார் கவுன்சில்:
இந்திய பார் கவுன்சில் மையம் 2013ம் ஆண்டு பல்கலைக்கழக குழு அறிமுகப்படுத்திய ஓராண்டு எல்.எல்.எம்., முதுகலை படிப்பை நிறுத்துவதாக முடிவெடுத்துள்ளது. மேலும் முதுகலை சட்டப்படிப்பை 2 ஆண்டுகளாக மாற்றி அமைத்து, 4 செமஸ்டர் வகுப்புகள் நடத்தவும் பார் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
இந்திய பார் கவுன்சில், ‘ஓராண்டு எல்.எல்.எம்., படிப்பு, வெளிநாட்டு சட்ட பல்கலையில் படித்த ஓராண்டு எல்.எல்.எம்., படிப்பின் அங்கீகாரம் ஆகியவற்றை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று அறிவித்தது.
வழக்கு :
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேசிய சட்டபல்கலையின் கூட்டமைப்பில் உள்ள பலர் மனு தாக்கல் செய்தனர். உச்சநீதிமன்றம் இது குறித்து விளக்கம் கேட்டு இந்திய பார் கவுன்சிலுக்கு அறிக்கை அனுப்பியது. இந்நிலையில் வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. அதில், இந்திய பார் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “ஓராண்டு எல்.எல்.எம்., படிப்பு 2022-2023 ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்படும்” என்று கூறினார். இதனால் வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Search This Blog
Saturday, February 13, 2021
Comments:0
எல்.எல்.எம்., படிப்பு 2022-2023ம் ஆண்டு முதல் ரத்து – இந்திய பார் கவுன்சில்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.