சேலம் கோட்டை அரசினர் மகளிர் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து நடத்திய பரிசோதனையில் ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி – பள்ளிகள் மூடப்படுமா??*
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பள்ளிகள் மூடப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பள்ளி ஆசிரியருக்கு கொரோனா:
கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள், கிட்டத்தட்ட 300 நாட்கள் கழித்து ஜனவரி 19ம் தேதி திறக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறி இருந்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் முதற்கட்டமாக நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் பாடங்களை கற்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஒருவருக்கு தற்போது கொரோனா உறுதியாகி உள்ளது. பள்ளிகளில் மாணவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஆசிரியை ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 19ம் தேதி காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் தனியார் ஆய்வகத்தில் ஆசிரியைக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
சோதனை முடிவுகள் இன்று வெளியான நிலையில் கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதியாகி உள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இந்த ஆசிரியை 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பவர் என்றும் தற்போது மாணவர்களை ஒழுங்குபடுத்த பணிக்கு வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Search This Blog
Friday, January 22, 2021
1
Comments
பள்ளி திறப்பு எதிரொலி!: ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!
Subscribe to:
Post Comments (Atom)
nice blog https://videosupdates.com/punjabi-status-video/
ReplyDelete