Breaking

Saturday, January 16, 2021

தபால் தேர்வை தமிழிலும் எழுதலாம்

தமிழகத்தில், தபால் அலுவலக மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் பணிக்கான தேர்வு, ஆங்கிலம், ஹிந்தியில் மட்டும் நடக்கும் என்ற, அறிவிப்பை மாற்றி, தமிழிலும் இத்தேர்வை எழுதலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. பிப்., 14ல் நடக்கும் இத்தேர்விற்கான அறிவிப்பை, ஜன., 4ல், மத்திய அரசு வெளியிட்டது. அதில், 'ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தான் தேர்வு நடத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. இதற்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழிலும் இத்தேர்வை நடத்த வலியுறுத்தப்பட்டது. இதுபற்றி, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கருக்கு, மதுரை எம்.பி., வெங்கடேசன் கடிதம் எழுதினார். தற்போது, இத்தேர்வை தமிழிலும் எழுதலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, வெங்கடேசனுக்கு, தபால் சேவை வாரியத்தின் உறுப்பினர் சந்தோஷ்குமார் கமிலா அளித்த பதிலில், 'ஏற்கனவே வெளியான அறிவிப்பில், இப்போது தமிழிலும் எழுதலாம் என திருத்தம் செய்துள்ளோம்' என, கூறியுள்ளார். இதற்காக, ஜன., 4ல், மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின், 12வது சாரம்சம் திருத்தப்பட்டு உள்ளது. அதில்,'ஆங்கிலம், ஹிந்தியில் தேர்வு நடக்கும்' என்றிருந்ததை, 'ஆங்கிலம், ஹிந்தி, தமிழில் வினாத்தாள் தரப்படும்' என, மாற்றியுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog