ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வாயிலாக 2020- 21 கல்வி ஆண்டில் கல்வி ஆண்டில் அனைத்து அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை
உருவாக்குவதற்காக பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக பள்ளி ஒன்றுக்கு ரூபாய் 500 வீதம் 6173 அரசு உயர் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் 31 ஆயிரத்து 297 அரசு தொடக்க நடுநிலை பள்ளிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் 19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதாலும் பார்வை ஒன்றில் உள்ள வழிகாட்டுதலின்படி விடுவிக்கப்பட்ட நிதியை உடனடியாக பயன்படுத்தி பணியினை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் அனைத்து அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனி கவனம் சார்ந்து ஒருநாள் இணையதள பயிற்சி 16 12 2020 முதல் வழங்கப்பட்டு வருகிறது இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்தவர்கள் செய்யாதவர்கள் விவரத்தை மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள படிவத்தை உடனடியாக பூர்த்தி செய்து அனுப்ப அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
Search This Blog
Wednesday, January 13, 2021
Comments:0
Home
CEO/DEO/SPD
PROCEEDINGS
Training
Safety & Security Training நிறைவு செய்யாத ஆசிரியர்கள் விவரம் கோரி உத்தரவு - SPD Proceedings
Safety & Security Training நிறைவு செய்யாத ஆசிரியர்கள் விவரம் கோரி உத்தரவு - SPD Proceedings
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.