Breaking

Friday, January 22, 2021

ஐ.ஏ.எஸ்., பயிற்சி நாளை மறுதினம் நுழைவுத் தேர்வு!

அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில், பயிற்சி பெற விண்ணப்பித்தவர்களுக்கு, நாளை மறுதினம் நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது.
மத்திய தேர்வாணைய குழு, 2021ல் நடத்தும் குடிமை பணிகளுக்கான முதல்நிலை தேர்வு எழுத, அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இம் மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற, ஆர்வமிக்க தமிழக மாணவர்களிடம் இருந்து, இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் கோரப்பட்டன. மொத்தம், 6,699 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நுழைவுத் தேர்வு, நாளை மறுதினம், 16 மையங்களில், கொரோனா வழிமுறைகளை பின்பற்றி நடக்க உள்ளது. தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க, பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு, பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog