பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரைவில் ஆய்வு நடத்த போக்குவரத்து துறை தயாராகி வருகிறது.
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொத்தம் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க முன்கூட்டியே பாதுகாப்புஅம்சங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சென்றும், சில இடங்களில் பள்ளி வாகனங்கள் வரவழைக்கப்பட்டும் ஆண்டுதோறும் வழக்கமாக மே மாதம் இறுதிக்குள் ஆய்வு நடத்தப்படும். கரோனாவின் தாக்கத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், பள்ளிவாகனங்களில் இன்னும் ஆய்வுமேற்கொள்ளப்படாமல் உள்ளது.இதற்கிடையே, பள்ளி வாகனங்களில் டயர்கள், அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதலுதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுநர்களின் கண் பார்வை, வேகக் கட்டுப்பாட்டுகருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பள்ளி வாகனங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆண்டுதோறும் மே மாதத்தில் ஆய்வைத் தொடங்குவோம். கரோனாவால் பள்ளிகள் திறக்கப்படாததால், பள்ளி வாகனங்களில்ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான பணிகள் நடைபெறுவதால், தமிழகஅரசு அறிவித்தவுடன் விரைவில்ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். ஆய்வின்போது, பள்ளி வாகனங்களில் குறைபாடு ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால், அதைசரிசெய்த பிறகே, அந்த வாகனங்களுக்கான தகுதிச்சான்று (எப்.சி) வழங்கப்படும். பெரிய அளவில் குறைபாடுகள் இருந்தால், உரிமம் சஸ்பெண்ட் செய்யப்படும்’’ என்றனர்.
பள்ளி வாகனங்களில் டயர்கள், அவசரகால கதவு, ஜன்னல்கள், தீயணைப்பு கருவிகள், முதலுதவிப் பெட்டி, வேகக் கட்டுப்பாட்டுகருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.
Search This Blog
Thursday, January 21, 2021
Comments:0
பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பள்ளி வாகனங்களில் விரைவில் ஆய்வு நடத்த முடிவு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.