பி.எப் கணக்கில் இருந்து பணம் எடுப்பது ரொம்ப ஈஸி! எப்படி தெரியுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 01, 2020

1 Comments

பி.எப் கணக்கில் இருந்து பணம் எடுப்பது ரொம்ப ஈஸி! எப்படி தெரியுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, இ.பி.எப்(EPF) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருக்கும். தாங்கள் பணிபுரியும் நிறுவனங்கள் சார்பில் அதில் மாதந்தோறும் பணம் வரவு வைக்கப்படும். இந்நிலையில், தங்கள் பிஎப் கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு அண்மையில் அனுமதித்தது. அதிலும் கொரோனா காலம் என்பதால் பணியாளர்கள் எடுத்துக்கொள்ளலாம் என கூறிய மத்திய அரசு அதற்கு எளிய நடைமுறைகளையும் கொண்டுவந்தது. ஆனால், பலருக்கு இந்த கணக்கில் இருந்து எப்படி பணத்தை எடுப்பது என்று தெரியாமல் விட்டு விடுகின்றனர். ஒருசில எளிய வழிமுறைகளை பூர்த்தி செய்தாலே பணத்தை எடுத்துவிடலாம் என்பதை நீங்கள் இப்போது தெரிந்துக்கொள்வீர்கள். உங்கள் மொபைலில் மத்திய அரசின் UMANG App டவுன்லோட் செய்யவேண்டும். UMANG App-ல் EPFO ஆப்ஷனுக்கு செல்லவேண்டும். அதில் Employee Centric ஆப்ஷனை கிளிக் செய்து, Raise Claim ஆப்ஷனை தேர்வு செய்துக்கொள்ள வேண்டும். இப்போது உங்களது EPF UAN Numberஐ பதிவிட வேண்டும். தொடர்ந்து உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும் OTP Passwordஐ பதிவிட்டு, பணம் எடுக்கும் முறையை தேர்வு செய்து Submit ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து உங்களுக்கு Claim reference number அனுப்பப்படும். அதைப் பயன்படுத்தி உங்களது கோரிக்கையின் நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம். இந்த வசதியை தடையின்றி பயன்படுத்த உங்கள் ஆதார் விவரங்கள் ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். UAN Number வுடன் ஆதார், பான்கார்டு ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வளவு தான் அடுத்த 15 வேலை நாட்களில் உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வந்துவிடும். ஒருவேளை உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணமும் தெரிவிக்கப்படும். பின்னர் அதனை சரிசெய்துக்கொண்டு மறுபடியும் இதே முறையில் விண்ணப்பிக்கலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. Thanks to curator for sharing about EPF. Contact Vakilsearch, we will assist you to EPF registration online

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews