3 ஆண்டுகளில் 1,325 பேருக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கல்: 2,700 பேருக்கு கிடைக்காத பரிதாபம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 26, 2020

Comments:0

3 ஆண்டுகளில் 1,325 பேருக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கல்: 2,700 பேருக்கு கிடைக்காத பரிதாபம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தவர்கள் மற்றும் 60 வயதை கடந்த ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க கோரிக்கை எழுந்தது. இதையேற்று, முதற்கட்டமாக 1500 கோயில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு 500 வழங்கப்பட்டன. தொடர்ந்து, 750 மற்றும் 1000 ஆக ஓய்வூதியம் உயர்த்தப்பட்டன. இந்த நிலையில், ஓய்வூதியம் பெறும் கிராம பூசாரிகளய 1500ல் இருந்து 4 ஆயிரமாக உயர்த்தப்பட்டன. ஆனால், ஆண்டு வருமானம் 24 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடந்த 2016 டிசம்பர் 31ம் தேதி வரை 3078 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்க ஆணையிடப்பட்டதில் டிசம்பர் 2016 வரை 2135 பேர் ஓய்வூதியம் பெற்றனர். ஆனால், கடந்த 2017 முதல் ஓய்வூதியம் பெறும் பூசாரிகளின் எண்ணிக்கை 1931 ஆக இருந்தது. இதனால், அறநிலையத்துறை நிர்ணயித்த 4 ஆயிரம் பேருக்கு கூட வழங்க முடியாத நிலை தான் கடந்த 3 ஆண்டுகளாக இருந்துள்ளது. ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், ஆண்டு வருமானத்தை 72 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்தி பல கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பேரில், தற்போது ஓய்வூதியத்தை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கியும், ஆண்டு வருமானம் 72 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அறிவிப்புக்கு பிறகே 1325 பேருக்கு கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews