பழைய இரும்புக்கடையில் இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்த மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 29, 2020

Comments:0

பழைய இரும்புக்கடையில் இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்த மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மயிலாடுதுறையில் பழைய இரும்புக்கடையில் இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்த மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சுமார் 2 டன் புத்தகங்களை எடைக்கு வாங்கிய பழைய இரும்புக்கடை உரிமையாளர் பெருமாளும் கைது செய்யப்பட்டுள்ளார் மயிலாடுதுறையில் பழைய இரும்புக்கடையில் இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்த மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் சஸ்பெண்ட்
* சுமார் 2 டன் புத்தகங்களை எடைக்கு வாங்கிய பழைய இரும்புக்கடை உரிமையாளர் பெருமாளும் கைது மயிலாடுதுறையில் பழைய இரும்புக் கடையில் கட்டுக்கட்டாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான 2,000 கிலோ எடையுள்ள 3,134 பாடப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புத்தகங்களை விற்ற மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர் மோகநாதன்(40), இரும்புக்கடை உரிமையாளர் பெருமாள்சாமி(56) ஆகியோர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பழைய இரும்பு கடைக்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில் 2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய்த்துறையினர் மயிலாடுதுறை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் மயிலாடுதுறை கிட்டப்பா மேல்நிலைப் பள்ளியில் உள்ள புத்தக கிடங்கில் பணியாற்றும் மேகநாதன் என்பவரிடத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் அரசு மாணவர்களுக்கு வழங்கும் புத்தகத்தை பழைய இரும்பு கடையில் பதுக்கி வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews