மருத்துவப் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை 2,965 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பியுள்ளன.
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை, பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் கடந்த 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 7 நாள்களாக பொதுக் கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்க 556 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில், 480 மாணவா்கள் பங்கேற்றனா். அவா்களில், 124 போ் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெற்றனா். சுயநிதி கல்லூரிகளில்102 போ் எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெற்றனா். அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 10 பேரும், தனியாா் கல்லூரிகளில் 16 பேரும் பி.டி.எஸ். இடங்களைத் தோ்வு செய்தனா். திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் மொத்தம் 252 இடங்கள் நிரம்பின.
தற்போது, அரசுக் கல்லூரிகளில், 413 எம்.பி.பி.எஸ். இடங்களும், 97 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. சுய நிதி கல்லூரிகளில், 430 எம்.பி.பி.எஸ். இடங்களும் 966 பி.டி.எஸ். இடங்களும் காலியாக உள்ளன. இதனிடையே, எஸ்.சி., எஸ்.டி. ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் வெள்ளிக்கிழமை தொடங்கும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.