வங்கி அலுவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 18, 2020

Comments:0

வங்கி அலுவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தால் இணைய வழியில் வங்கி அலுவலர் முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்புகள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் வேலை தேடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த பயிற்சி மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி அலுவலருக்கான முதல்நிலை தேர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பணியிடத்திற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற 17- 12 -2020 வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு இணையவழி செயலி மூலமாக புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தால் துவங்கப்பட உள்ளது .மேலும் பயிற்சியின் போது இலவசமாக குறிப்புகளும் முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் அப்போது மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்களின் விவரத்தினை deo.pki@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு தங்களுடைய வாட்ஸ்அப் தொலைபேசி எண்ணை பதிவு செய்து கொள்ளலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி உமா மகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews