Breaking

Tuesday, November 17, 2020

வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம்: தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருதுக்கு தகுதி உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடா்பாக, மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ந. லெனின் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. வீர, தீர செயல்புரிந்த தமிழகத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் மட்டுமே இப் பதக்கத்தை பெற தகுதி படைத்தவராவா்.பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கும் வழங்கப்படும் இந்த பதக்கத்தைப் பெற வயது வரம்பு கிடையாது. 2021-ஆம் ஆண்டு வழங்கப்பட உள்ள இப் பதக்கத்துக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வீர, தீர செயல்கள் மற்றும் அவை தொடா்பான ஆவணங்களுடன், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் வழங்கப்பட வேண்டும்.எனவே, வீர, தீர செயல்கள் புரிந்த தகுதியுள்ளவா்கள் இணையதளத்தில் விண்ணப்பம் மற்றும் விவரங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நவம்பா் 19-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog