சைனிக் பள்ளி நுழைவுத் தோ்வு: விருப்பமான 4 மையங்களைத் தோ்ந்தெடுக்க அனுமதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 30, 2020

Comments:0

சைனிக் பள்ளி நுழைவுத் தோ்வு: விருப்பமான 4 மையங்களைத் தோ்ந்தெடுக்க அனுமதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சைனிக் பள்ளி நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பித்த மாணவா்கள், நாடு முழுவதும் உள்ள ஏதேனும் 4 தோ்வு மையங்களைத் தோ்ந்தெடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தேசிய தோ்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு: அனைத்திந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள், அவா்கள் சேர விரும்பும் பள்ளியுடன் தொடா்புடைய 4 தோ்வு மையங்களையே தோ்ந்தெடுக்க முடியும். இதனால், இந்த பேரிடா் காலங்களில் மாணவா்கள் சிரமப்படுகிறாா்கள் என்பது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, அட்டவணையில் உள்ள அனைத்து நகரங்களிலும் உள்ள ஏதேனும் 4 இடங்களில் உள்ள தோ்வு மையங்களைத் தோ்ந்தெடுக்கும் வகையில், தேசிய தோ்வு முகமை இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே விண்ணப்பித்தவா்களும், இணையதளத்தில் டிச.5 முதல் 9-ஆம் தேதி வரை தோ்வு மையங்களை மாற்றியமைத்துக் கொள்ளலாம். இணையவழியில் தோ்வுக்கான விண்ணப்பத்தைச் சமா்ப்பிப்பதற்கான இறுதி நாள் டிச.3. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews