'மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களின் கட்டணத்தை, அரசே ஏற்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால், 26 அரசு மருத்துவ கல்லுாரிகளில், 227 மாணவர்கள்; 14 தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 86 மாணவர்கள் என, மொத்தம், 313 பேருக்கு, எம்.பி.பி.எஸ்., படிப்பில் இடங்கள் கிடைத்துள்ளன.
அதேபோல, பல் மருத்துவப் படிப்பை பொறுத்த வரை, 2 அரசு கல்லுாரிகளில், 12 மாணவர்கள்; 18 தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில், 80 மாணவர்கள் என, மொத்தம், 92 பேருக்கும் இடம் கிடைத்துள்ளது. இட ஒதுக்கீடு சட்டத்தால், ஒட்டு மொத்த மாக, 405 பேர் பயன் அடைந்துள்ளனர். அரசு மருத்துவ கல்லுாரிகளில் கல்வி கட்டணமாக, ஆண்டுக்கு, 11 ஆயிரம் ரூபாய். ஆனால், தனியார் கல்லுாரிகளில், 3 - 4 லட்சம் ரூபாய் வரைவசூலிக்கின்றனர்.
தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில் ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய் வசூலிக்கின்றனர். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களால், இந்த அளவு கல்வி கட்டணத்தை செலுத்த வாய்ப்பில்லை. தனியார் கல்லுாரிகளில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால், படிப்பு தொடர முடியாமல் போய் விடுகிறது. எனவே, கட்டணம் செலுத்துவதற்கும் அரசு உதவி செய்து, அவர்கள் மருத்துவம் படிக்க உதவ வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை:
சேலம் மாவட்டத்தின், 100 ஏரிகளுக்கு, மேட்டூர் அணையில் இருந்து, உபரி நீரை எடுத்துச் சென்று நிரப்பும் திட்டத்திற்கு, கர்நாடக அரசு எதிர்ப்புதெரிவித்திருப்பது, அதிர்ச்சி அளிக்கிறது.மேட்டூர் உபரி நீர் திட்டத்தை விரிவுப்படுத்த, விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், கர்நாடகத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத, இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.