Breaking

Wednesday, November 18, 2020

1ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கன்னியாகுமரி கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:- தமிழ்நாட்டில் மத்திய அரசால் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்தவர்கள் சிறுபான்மையினராக அறி விக்கப்பட்டுள்ளனர். இந்த மதங்களைச் சேர்ந்தவர்களில் அரசு அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2020- 2021-ம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும் 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக் செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships. gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் (என்.எஸ்.பி.) ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ, மாணவிகள் வருகிற 30-ந் தேதி வரையிலும் விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2020-2021-ம் ஆண்டில் மாணவ, மாணவிகளுக்கு முந்தைய வகுப்பில் மதிப்பெண் 50 சதவீதம் பெற்றிருக்கவேண்டும் என்ற நிபந்தனை இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பான மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minority affairs.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog