தமிழகத்தில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், ஜாலியும், உற்சாகமும் அடையும் விதமாக, பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. 'வரும், 16ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படாது; பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை' என்று, அரசு தெரிவித்துள்ளது. அதேபோல, உயர் நீதிமன்றம் சொன்னதை ஏற்று, கல்லுாரிகள் திறப்பும், டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிப் போடப்பட்டு உள்ளது.
அரசியல், சமுதாய, கலாசார மற்றும்மதக் கூட்டங்களுக்கும், அரசு தடை விதித்துள்ளது.தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலைத் தடுக்க, மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அன்று முதல், பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஓரிரு மாதங்களாக, மக்களின் வாழ்வாதாரம் கருதி, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை, அரசு அறிவித்து வருகிறது. பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையும், அனைத்து கல்லுாரிகளும், வரும், 16ம் தேதி முதல் செயல்பட, அரசு அனுமதி அளித்தது.
கருத்து கேட்புக் கூட்டம்
ஆனால், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் திறக்க, அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதைத் தொடர்ந்து, 9ம் தேதி, அனைத்து பள்ளிகளிலும், பெற்றோரிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர், நோய் தொற்று பரவல் முழுமையாக நீங்கிய பின், பள்ளிகளை திறக்க வலியுறுத்தினர். இதற்கிடையில், கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறப்பை, தள்ளிப் போடும்படி, உயர் நீதிமன்றமும் கருத்து தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, 'பள்ளிகள் திறப்பு தொடர்பான, புதிய அறிவிப்பை, முதல்வர் வெளியிடுவார்' என, நேற்று முன்தினம் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதன்படி, நேற்று முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிவிப்பு: பள்ளிகள், கல்லுாரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கும் என, வல்லுனர்களும், பெற்றோரும் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில், பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை; கல்லுாரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லுாரிகளின் விடுதிகள், பணியாளர் விடுதிகள், வரும், 16ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளிகளை திறப்பது சம்பந்தமாக, ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வழியாக, பொது மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். 9ம் தேதி, அனைத்து பள்ளிகளிலும், பெற்றோர் - ஆசிரியர் கழகங்களின் கருத்து கேட்கப்பட்டது. மாறுபட்ட கருத்துக்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, தற்போதைக்கு திறக்க வேண்டியதில்லை என்றும், மாறுபட்ட கருத்துக்களை, பெற்றோர் தெரிவித்தனர். இதை, கல்வித் துறை ஆய்வு செய்தது. அதன்படி, பள்ளிகள் மற்றும் பள்ளிகளின் விடுதிகள், 16ம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பள்ளிகள் திறப்பு தேதி, சூழ்நிலைக்கு ஏற்ப, பின்னர் அறிவிக்கப்படும்.அதேபோல, 16ம் தேதி முதல், கல்லுாரிகளை திறப்பது குறித்தும், கல்லுாரிகள் மற்றும் பல்கலை நிர்வாகங்களிடம், கருத்து கேட்கப்பட்டது. அதன்படியும், பல்கலை மானியக் குழு வழிகாட்டுதலின்படியும், அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு படிக்கும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளை, டிச., 2 முதல் திறக்க உத்தரவிடப்படுகிறது.
இணைய வழி கல்வி
இதர வகுப்பு மாணவர்களுக்கு, கல்லுாரி திறப்பு தேதி, பின்னர் அறிவிக்கப்படும். டிச., 2 முதல் திறக்கப்படும் கல்லுாரிகளில் மட்டும், மாணவர்களுக்கான விடுதிகளும் திறக்கப்படும். கல்லுாரிகள் மற்றும் விடுதிகளுக்கான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், தனியாக வெளியிடப்படும். பிற மாணவர்களுக்கு, ஏற்கனவே நடந்து வரும், இணைய வழி கல்வி முறை தொடர்ந்து நடக்கும்.கொரோனா தொற்று ஏற்படாத வகையில், முக கவசம் அணிதல், தனி நபர் இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை, பொது மக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அரசு எடுத்து வரும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும், தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மீண்டும் பரவும் நிலை
அனைத்து மாவட்டங்களிலும், நோய் தொற்று பரவல், படிப்படியாக குறைந்து வருகிறது. அரசின் சிறப்பான செயல்பாட்டாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பாலும், நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.தற்போது, பண்டிகை காலம் என்பதால், பொதுமக்கள் பல்வேறு பொருட்களை வாங்க, கடை வீதிகள் மற்றும் பஸ் நிலையங்களில் கூடுகின்றனர்.அவ்வாறு கூடும் போது, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் இருப்பது, அரசின் கவனத்திற்கு தெரிய வருகிறது.வெளிநாடுகளில் கொரோனா தொற்று, இரண்டாம் அலையாக, மீண்டும் பரவும் நிலையை காண முடிகிறது. இந்த சூழ்நிலையில், நோய் தொற்று தடுப்பு பணியை, மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.எனவே, சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களை, 100 பேருக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில், வரும், 16ம் தேதி முதல் நடத்த, அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. அவற்றுக்கான தடை, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தொடரும். இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார். மக்களை குழப்ப வேண்டாம்
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: தமிழகத்தில், பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு; பள்ளிகள் திறப்பு தேதி குறித்து, பின்னர் தெரிவிக்கப்படும் என்ற அறிவிப்பு, அரசின் ஊசலாட்ட மனநிலையை காட்டுகிறது. எந்த முன்யோசனையும் இல்லாமல் அறிவிப்பதும், பின் அதிலிருந்து பின்வாங்குவதும், அரசின் வழக்கமாகி விட்டது. கொரோனாவை விட, அரசின் அறிவிப்புகள் வாயிலாக எழும் பீதிகள் தான், அச்சம் தருவதாக உள்ளன. குழப்பவாதிகள் கையில் அரசு இருக்கிறது என்பதற்கு, பள்ளிகள் திறப்பு உதாரணம் போதும். குழப்ப அறிவிப்புகளின் வாயிலாக, மக்களை மேலும் மேலும் குழப்ப வேண்டாம்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: பள்ளிகள், கல்லுாரிகள் திறப்பை, தமிழக அரசு ஒத்தி வைத்திருப்பது, மிகச் சரியான முடிவு. இம்முடிவை வரவேற்கிறேன்.பண்டிகை காலங்களில், கொரோனா பரவல் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், இந்த விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது. எனவே, இனி வரும் நாட்களிலும், பள்ளிகள், கல்லுாரிகள் திறப்பு குறித்த முடிவு, மருத்துவ வல்லுனர்கள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் மேற்கொள்ள வேண்டும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.