தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-6
ந.க. எண்.045690/எம்/இ2/2020,
நாள் 1.11.2020
பொருள்:
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை- 25 - புத்தாக்க
அறிவியல் ஆய்வு மானக் விருது 2018- 2019, 2019-2020 ஆம்
ஆண்டுகளுக்கான மாநில அளவிலான கண்காட்சிப் போட்டிகள்
இணைய மென்பொருள் மூலமாக நடத்துவது - தொடர்பாக.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், அனுப்பிய கடித எண்.
1555/P3/2020, நாள்: 12.11 2020.
பார்வை:
பார்வையில் காணும் கடிதத்தின் படி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பாக
புத்தாக்க அறிவியல் மானக் விருதிற்காக ( INSPIRE MANAK AWARD) 2018 - 2019 மற்றும்
2019 - 2020 ஆகிய ஆண்டுகளுக்கான மாநில அளவிலான கண்காட்சிகள் (State Level
Exhibition and Project Competition) நடத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது
குறித்து மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் தேசிய அறிவியல் புத்தாக்க
நிறுவனம் ஆகியவை அனுப்பிய சுற்றறிக்கையின் படி மாநில அளவிலான கண்காட்சிகள் இணைய
வழியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் நடப்பில் இருப்பதால் இந்நிகழ்ச்சிகள்
நடத்துவது தாமதமானது இந்நிலையில் மாநில அளவிலான கண்காட்சிகளை இணைய வழியில்
நடத்த மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் தேசிய புத்தாக்க நிறுவனம் ஆகியன
இணைந்து புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளன. தனிப்பட்ட கணினி அல்லது கைபேசி
மென்பொருள் இப்பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது. MANAK Competition APP என்ற
இதனை Google Play Store-இல் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தங்களுடைய அறிவியல்
செயல்முறைகளை ஒளி, ஒலி காட்சிகள் மூலம் தயாரித்து செல்பேசி அல்லது இணையம் மூலமாக
அனுப்ப வேண்டும். இதற்கான இறுதித் தேர்வு 25, டிசம்பர் 2020 அறிவியல்
தொழில்நுட்பத்துறை வரையறை செய்துள்ளது.
இது பற்றிய விவரங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தால் அனுப்பப்பட்டுள்ளன. பள்ளித்தலைமை
ஆசிரியர்களுக்கு இத்தகவலை அறிவித்து குறிப்பிட்ட தேதிக்குள் அம்மாணவர்கள் தங்களுடைய
செயல்முறைகளை அனுப்பி வைக்க அறிவுறுத்தமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், மென்பொருளைப் பயன்படுத்துவது சார்ந்து மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய
செயல்முறைகள் ஆகியன குறித்து மாணவர்களின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட
இணைய வழி கலந்தாய்வுக் கூட்டத்தை தேசிய புத்தாக்க நிறுவனம் டிசம்பர் முதல் வாரத்தில்
நடத்தவுள்ளது.
எனவே, அந்தந்த மாவட்டத்தில் தேர்தெடுக்கப்பட்ட மாணவர்களின் வழிகாட்டி
ஆசிரியர்களைப் பற்றிய விவரங்களைக் கீழ்கண்ட அட்டவணைப்படி தயார் செய்து தமிழ்நாடு
அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (நாட்டு
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.