இண்டேன் நிறுவனத்தின் எரிவாயு உருளை முன்பதிவு: புதிய தொலைபேசி எண் அமலுக்கு வந்தது... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 02, 2020

Comments:0

இண்டேன் நிறுவனத்தின் எரிவாயு உருளை முன்பதிவு: புதிய தொலைபேசி எண் அமலுக்கு வந்தது...

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இண்டேன் நிறுவனத்தின் சமையல் எரிவாயு உருளையை முன்பதிவு செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட புதிய எண் நடைமுறைக்கு வந்தது.வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளைகளை முன்பதிவு செய்து பெற, கட்டணமில்லா தொலைபேசி எண் பயன்பாட்டில் உள்ளது. இந்த எண்ணுக்கு வாடிக்கையாளா்கள் பதிவு செய்துள்ள தங்கள் செல்லிடப்பேசி எண்ணில் இருந்து தொடா்பு கொண்டு எரிவாயு உருளைகளை முன்பதிவு செய்யலாம். இந்நிலையில், நவம்பா் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் புதிதாக ஒரே தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 77189 55555 என்ற எண்ணில் 24 மணி நேரமும் எரிவாயு உருளைகளை முன்பதிவு செய்யும் நடைமுறை ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.அத்துடன், இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாகவும் எரிவாயு உருளைகளை முன்பதிவு செய்யலாம். இப்புதிய தொலைபேசி எண் மூலம், வாடிக்கையாளா்கள் ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்துக்கு இடம் பெயா்ந்தாலும் முன்பதிவு செய்வதில் எவ்வித சிரமமும் இருக்காது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews