பழைய புத்தகங்கள் அனைத்தையும் மாணவர்களிடமிருந்து பெற்று பதிவேட்டில் பராமரிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 16, 2020

Comments:0

பழைய புத்தகங்கள் அனைத்தையும் மாணவர்களிடமிருந்து பெற்று பதிவேட்டில் பராமரிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய பகமைத் தீர்ப்பாயத்தில் திரு.ஸ்ரீகாந்த் கடே என்பாரால் வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கில் பெறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் பள்ளிகளில் புத்தக வங்கி தொடங்கவும் , அதனை பராமரிக்கவும் பார்வை 3 ல் காண் 16.03.2019 நாளிட்ட செயல்முறைகளின் வாயிலாக தலைமை ஆசிரியர்களுக்கும் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. தற்போது 2019-2020 ஆம் கல்வியாண்டு முடிவுற்ற நிலையில் , மாணவர்கள் புதிய புத்தகம் பெறுவதற்காக பள்ளி வளாகம் வருகை தருகையில் பழைய புத்தகங்கள் அனைத்தையும் மாணவர்களிடமிருந்து பெற்று , வகுப்பு மற்றும் பாடவாரியாகத் தொகுத்து பயன்படுத்தக்கூடிய புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கிடவும் , பயன்படுத்த முடியாத புத்தங்களை பெற்று இருப்பு வைத்திடுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது சார்ந்த பதிவேட்டினை பராமரிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews