'மருத்துவப் படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தரும், புதிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க, கவர்னர் தாமதிக்கக் கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, ௭.௫ சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ௨௧ நாட்கள் ஆகியுள்ளன. ஆனால், அச்சட்டத்திற்கு இன்னும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.
மாணவர்கள் நலன் சார்ந்த விஷயத்தில், கவர்னர் தேவையின்றி, காலதாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது.நடப்பாண்டிற்கான, 'நீட்' தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வரும், ௧௨ம் தேதி வெளியிடப்பட உள்ளன. அதற்கு முன், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை வெளியிட வேண்டும்.அதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீடு பற்றி குறிப்பிட வேண்டும்.
இத்தகைய சூழலில், கவர்னர் தேவையற்ற தாமதம் செய்யக் கூடாது.மருத்துவக் கல்வி கனவாகிப் போன அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவம் படிப்பதற்கான சமூக நீதி வழங்க, கவர்னர் தடையாக இருக்கக் கூடாது.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.