சி.பி.ஸ்.இ.யால் நடத்தப்பட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கான 'கம்பார்ட்மன்ட்' தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதில் 59.43 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் பிரதான பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்காக 'கம்பார்ட்மன்ட்' எனப்படும் சிறப்பு தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்துவது வழக்கம்.
இதன்படி செப்டம்பரில் பிளஸ் 2 மாணவர்களுக்காக கம்பார்ட்மன்ட் தேர்வு நடந்தது.கொரோனா காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபின் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி ஏற்படவில்லை என்றால் அந்த மாணவர்களும் இந்த தேர்வை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டது.இந்த தேர்வை 1.05 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 59.43 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.