:'கர்நாடக மாநிலத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், பழனிசாமி., கூறியிருப்பதாவது:கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், பல ஆண்டுகளுக்கு முன், தமிழ் மாணவர்கள், தமிழ் வழியில் கல்வி கற்க, கர்நாடக அரசு, பள்ளிகளை துவக்கி நடத்தி வருகிறது. அதேபோல், தனியார் பள்ளிகளுக்கும் அனுமதி வழங்கி, மானியமும் வழங்கி வருகிறது. தற்போது, கர்நாடகாவில் உள்ள, பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
அதேபோல, தமிழ் வழியில் கல்வி கற்க, புதிய தனியார் பள்ளிகள் துவக்க, கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கவில்லை என, கர்நாடகா தமிழ் பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் சங்கம் அனுப்பிய மனுவில் தெரிய வந்துள்ளது. அந்த மனு நகலை, உங்களுக்கு அனுப்புகிறேன். கர்நாடகாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, தமிழர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
முக்கியமாக, கோலார் தங்கச் சுரங்கம், சந்துார் மாங்கனீஸ் சுரங்கம், சிக்மகளூரு, மங்களூரு பகுதிகளில் உள்ள, 'காபி எஸ்டேட்'கள் வளர்ச்சிக்கு, முக்கிய பங்காற்றி உள்ளனர். கட்டுமானம் மற்றும் வேளாண் துறையிலும், முக்கிய பங்காற்றி உள்ளனர்.
எனவே, கர்நாடகாவில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள, தமிழாசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சமீபத்தில் மூடப்பட்ட பள்ளிகளை, மீண்டும் திறக்க வேண்டும்.தமிழ் வழியில் படிக்க, தனியார் பள்ளிகளை துவங்க, ஒப்புதல் அளிக்க வேண்டும். வேறு மொழிவழி பள்ளிகளாக மாற்றப்பட்ட பள்ளிகளை, மீண்டும் தமிழ் வழி பள்ளிகளாக மாற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.