'அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை' - அமைச்சர் அன்பழகன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 17, 2020

Comments:0

'அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை' - அமைச்சர் அன்பழகன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''உயர்கல்வியில், 69 சதவீத இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகும் என்பதால், அண்ணா பல்கலை கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என, அரசு முடிவெடுத்துள்ளது,'' என, உயர்கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் கூறினார். தர்மபுரி மாவட்டம், நுாலகஹள்ளியில் நடந்த விழாவில் பங்கேற்ற, அமைச்சர் அன்பழகன் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வெழுதிஉள்ளோர், தனித்தேர்வர்கள், இடம் உள்ள கல்லுாரிகளுக்கு விண்ணப்பித்து, இம்மாத இறுதிக்குள் சேர்ந்து கொள்ளலாம்.உலகத்தரம் வாய்ந்த பல்கலையாக, அண்ணா பல்கலை உள்ளது. இப்பல்கலைக்கு,உயர் சிறப்பு அந்தஸ்து கோரி,துணைவேந்தர் சுரப்பா விண்ணப்பித்தது குறித்து, அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து வரும் போது, தமிழகஅரசு ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும்,69 சதவீத இட ஒதுக்கீடு கேள்விகுறியாகும்; இட ஒதுக்கீட்டை பறிகொடுக்க முடியாது. சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு வரலாம்; வட மாநில மாணவர்கள் அதிகம் சேர வாய்ப்புள்ளது. கூடுதல் கட்டணம் வரவும் வாய்ப்புள்ளது. இந்த நிலை வரக்கூடாது என்பதற்காக, சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, தற்போதுள்ள நடைமுறையே தொடரும்.பல்கலைக்கு சீர்மிகுந்து அந்தஸ்து தரும் கவுன்சில் வாயிலாக கிடைக்கக்கூடிய சலுகைகள், தேவையான நிதியை, தமிழக அரசே வழங்கும். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில், 2035ம் ஆண்டுக்குள், உயர்கல்வியில், 35 சதவீதம் மாணவர்கள் படிக்கும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் தற்போதே, 49.6 சதவீத மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். அதன்படி, 15 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இலக்கை அடைந்துள்ளோம். அண்ணா பல்கலையில், 13 உறுப்பு கல்லுாரிகள், 461 இணைப்பு கல்லுாரிகள், நான்கு மண்டல மையங்கள் உள்ளன. இவற்றுக்கான மேம்பாட்டு பணிகளில், தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews