ஒருங்கிணைந்த கல்வி - பள்ளிகளில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார் மன்றம் (Youth & Eco Club) ஏற்படுத்தப்பட்டது - தொடர் நடவடிக்கை - சார்பு - கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 15, 2020

ஒருங்கிணைந்த கல்வி - பள்ளிகளில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார் மன்றம் (Youth & Eco Club) ஏற்படுத்தப்பட்டது - தொடர் நடவடிக்கை - சார்பு - கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சேலம் மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அவர்களின் செயல்முறைகள் முன்னிலை : திரு.து.கணேஷ்மூர்த்தி எம்.ஏ.,பி.எட்., ந.க.எண். 0296 /MDO /SS/2019 நாள்: .09.2020 பொருள்: ஒருங்கிணைந்த கல்வி சேலம் மாவட்டம் - பள்ளிகளில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார் மன்றம் (Youth & Eco Club) ஏற்படுத்தப்பட்டது - தொடர் நடவடிக்கை - சார்பு. பார்வை: 1. மாநில திட்ட இயக்குநர் அவர்கள், ஒருங்கிணைந்த கல்வி, சென்னை அவர்களின் கடித ந.க.எண்:3398/416/ஒ.ப.க./2019 நாள். 30.01.2020. 2. இவ்வலுவலக ந.க.எண். 0296 / MDO / SS | 2019 நாள்:27.02.2020. மேற்காண் பார்வை 1 மற்றும் 2-ன்படி 2019-20ஆம் ஆண்டு அனைத்து அரசு தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார் மன்றம் (Youth & Eco Club) ஏற்படுத்தி நடைமுறைப்படுத்திட தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.5000/- வீதம் மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ.15000/- வீதம் ஒதுக்கீடு செய்து வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்கப்பட்டது. இம்மன்றம் இலக்கியப் பிரிவு, கலை கலாச்சாரப் பிரிவு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரப் பிரிவு என்ற 3 குழுக்களாக பிரித்து செயல்பட வேண்டும் எனவும், தொடக்கப் பள்ளிகளில் 3 முதல் 5ஆம் வகுப்புகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்புகளின் மாணவ/மாணவிகள் 5பேர் கொண்ட குழு ஏற்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆசிரியர்களை சுழற்சி முறையில் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கவும் கூறப்பட்டது. இதில் கலை கலாச்சாரப் பிரிவு சார்ந்த செயல்பாடுகளில் முக்கியமாக மரக்கன்று நடுதல், மூலிகைத் தோட்டம் அமைத்தல், மண்புழு உரம் அமைத்தல், மரக்கன்றுகளுக்கு வேலி அமைத்தல், சொட்டு நீர் பாசன முறையை உருவாக்குதல், பள்ளி வகுப்பறை ஜன்னல்களுக்கு தேவையான கொசுவலை அமைத்தல், தோட்டங்களை உருவாக்க மற்றும் பராமரிப்பதற்குத் தேவையான உபகரணங்கள் வாங்குதல் மற்றும் இந்தப் பிரிவில் செயல்படுத்தப்பட வேண்டிய செயல்பாடுகளுக்கான செலவினங்களை உடனடியாக மேற்கொண்டு நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள், செடிகள் நட்டு அதைச் சுற்றி கம்பி வேலிகள் அமைத்து பாதுகாத்து தொடர் பராமரிப்பு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத் தொகையினை பயன்படுத்தி பள்ளியின் பெயர்ப்பலகை மற்றும் சுற்றுச் சூழல் மன்ற பெயர்ப்பலகை (பள்ளியின் பெயர் மற்றும் சுற்றுச் சூழல் மன்ற குறியீடு ஆகியவற்றுடன்) ஆகியவற்றினை பள்ளியின் முன்புறத்தில் வைக்க வேண்டும். இச் செயல்பாடுகள் சார்ந்த புகைப்படங்கள் மற்றும் அதன் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சேகரித்து 17.09.2020 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட திட்ட அலுவலகத்தில் Soft copy ஆக ஒப்படைக்க அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள்(பொ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்தொகையினை எடுத்து செலவினம் மேற்கொண்ட பள்ளிகளின் விவரம் மற்றும் தொகை எடுக்காத பள்ளிகளின் விவரம் ஆகியவற்றினை கீழே உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மின்னஞ்சல் வழியாக 14.9.2019 அன்று மாலை 4 மணிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விடுவிக்கப்பட்ட தொகையினை எடுத்து முழுவதும் செலவினம் மேற்கொள்ளப்பட்ட பள்ளிகளில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள UC படிவத்தினை பூர்த்தி செய்து உரிய கையொப்பங்களுடன் 18.09.2020 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட திட்ட அலுலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தொகை எடுக்காத பள்ளிகள் உடனடியாக தொகையினை எடுத்து செலவினம் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியருக்கு உரிய வழிகாட்டுதள் வழங்க அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள்(பொ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு :இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் சார் மன்றம் பயனீட்டுச் சான்றிதழ் 2019-2020 பெறுதல் :-
1. சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள், சேலம் மாவட்டம் - மேற்பார்வையாளர்(பொ) வழியாக.
2. அனைத்து மேற்பார்வையாளர்கள் (பொ) , சேலம் மாவட்டம். உரிய நடவடிக்கை மேற்கொள்ள.

நகல் :-
1. முதன்மைக்கல்வி அலுவலர், சேலம் அவர்களுக்கு தகவலுக்காக அன்புடன் அனுப்பி வைக்கலாகிறது.
2. மாவட்டக்கல்வி அலுவலர்கள், சேலம், சேலம் ஊரகம், ஆத்தூர், சங்ககிரி, எடப்பாடி - தக்க நடவடிக்கையின் பொருட்டு.
3. அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், சேலம் மாவட்டம். - தக்க நடவடிக்கையின் பொருட்டு.
4. உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைந்த கல்வி, சேலம். தகவலுக்காக.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews