பள்ளிக்கல்வி - தேசிய பேரிடர் மேலாண்மை - வடகிழக்கு பருவ மழை 2020-ஐ எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பள்ளிகளுக்கு 11 அறிவுரைகள் வழங்குதல் - சார்பு CEO செயல்முறைகள் - நாள் - 10.09.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 11, 2020

பள்ளிக்கல்வி - தேசிய பேரிடர் மேலாண்மை - வடகிழக்கு பருவ மழை 2020-ஐ எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பள்ளிகளுக்கு 11 அறிவுரைகள் வழங்குதல் - சார்பு CEO செயல்முறைகள் - நாள் - 10.09.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஈரோடு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண் 8459 / 21/ 2017 நாள் - 10.09.2020
பொருள்
| பள்ளிக்கல்வி - தேசிய பேரிடர் மேலாண்மை - ஈரோடு மாவட்டம்- வடகிழக்கு பருவ மழை 2020-ஐ எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடு | நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆய்வுக் கூட்டம் 09.09.2020 அன்று ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது- பள்ளிகளுக்கு அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவரின் கடிதம்
ந.க.எண். 17092/ 2020/பே.மே நாள். 04.09.2020
பார்வை மேற்காண் பொருள் சார்பாக , ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகைப் பள்ளிகளிளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

1.) வருவாய் / சுகாதாரத் துறையில் இருந்து மழைக்கால முகாம் அமைக்கக் கோரினால் வழங்கிட பள்ளிகளில் தண்ணீர் , மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருப்பதுடன் , அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

2.) ஏற்கெனவே பள்ளி வளாகத்தில் உள்ள இடிக்கப்பட வேண்டிய மற்றும் பாழடைந்த கட்டிடங்களின் முன்புறம் அனைவருக்கும் தெரியும் வண்ணம் 'தடை செய்யப்பட்ட பகுதி' (NO ENTRY ZONE) என அறிவிப்பு பலகை வைத்து மாணவர்கள் மற்றும் எந்தவொரு நபரும் அங்கு செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்களை தொடர்பு கொண்டு அவற்றை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். 3.) குடிநீர் தொட்டி, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத்தொட்டிகளில் Water Chlorination செய்தல் வேண்டும்.கழிவறைகளை bleaching powder கொண்டு வாரம் ஒருமுறை சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படல் வேண்டும். தலைமையாசிரியர் வாரம் ஒருமுறை மேற்காண் பணிகளை பார்வையிட வேண்டும். ஈரமான சுவர் உள்ள பகுதிகள் மற்றும் மரத்தடியில் எவரும் அமரா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், மின்கம்பிகள் அருகே எவரும் செல்லாவண்ணம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

4.) பள்ளிக் கட்டிடங்களின் மேற்பகுதிகளில் (Open Terrace) மற்றும் பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் டப்பாக்கள் , தேங்காய் ஓடுகள் மற்றும் இதர குப்பைகளில் நீர் தேங்கா வண்ணம் கண்காணிக்கப்பட வேண்டும்.
5.) பள்ளி வளாகத்தில் உள்ள மறைக்கப்படாத மின்கம்பிகள் (Unconcealed wires) மற்றும் தளர்வான மின்கம்பிகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது. 6.) மழை,வெள்ள அபாய பகுதியில் உள்ள பள்ளிகளில் பள்ளி ஆவணங்கள், பதிவேடுகள், நூலகப் புத்தகங்கள், ஆய்வகப் பொருட்கள், நலத்திட்டப் பொருட்கள், சத்துணவுப் பொருட்கள் ஆகியவற்றை உயரமான இடங்களில் வைத்து பாதுகாத்திட வேண்டும்.

7.) பள்ளிக் கட்டிடங்களில் உள்ள அனைத்து கதவு மற்றும் ஜன்னல்கள் மழைக்காலங்களில் மூடப்பட்டிருக்க வேண்டும்

8.) பள்ளி வளாகத்தில் உள்ள பார்த்தீனியம் உள்ளிட்ட அனைத்து வகை புதர் செடிகளும் அகற்றப்பட வேண்டும்

9.) பள்ளி வளாகத்தில் உள்ள கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளை தகுந்த பாதுகாப்புடன் மூடப்பட்ட நிலையில் உள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.

10.) அருகில் உள்ள ஆறுகள் மற்றும் குளம் குட்டைகளுக்கு மாணவர்கள் எவரும் செல்லா வண்ணம் உரிய அறிவுரை வழங்கப்பட வேண்டும்.

11.) மேற்காண் பொருள் சார்பாக, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பள்ளிப்பார்வையின் போது ஆய்வு செய்திட மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர்
ஈரோடு
பெறுதல். -
1.) தலைமையாசிரியர்கள் முதல்வர்கள் அனைத்து அரசு /நகரவை/ நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்
2.)அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஈரோடு மாவட்டம் (தொடர் நடவடிக்கையின் பொருட்டு).
3.) அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், ஈரோடு மாவட்டம்.
4.) சமக்ர சிக்ஷா திட்டத்தில் உள்ள ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பொறியாளர்கள்
5.) குறுவள மையப் பள்ளி தலைமையாசிரியர்கள்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews