Breaking

Sunday, September 20, 2020

'ஆன்லைன்' தேர்வில் 'மாஸ்க்' அண்ணா பல்கலை தடை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலையின் 'ஆன்லைன்' தேர்வில், 'நீட்' தேர்வு போன்று, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முகக் கவசம் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை சார்பில், இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு, இறுதி ஆண்டு கடைசி செமஸ்டர் தேர்வு, ஆன்லைன் வழியாக நடத்தப்படுகிறது.கடந்த, 2019 - 20ம் கல்வி ஆண்டில், இறுதி ஆண்டாக படித்து, கடைசி செமஸ்டர் தேர்வு எழுத உள்ளவர்களுக்கும், முந்தைய ஆண்டு களில், இறுதி ஆண்டுக்கான கடைசி செமஸ்டர் தேர்வில், 'அரியர்' வைத்து உள்ளவர்களுக்கும், ஆன்லைன் வழியாக தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வு அட்டவணையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தேர்வு துறை மற்றும் கூடுதல் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியர் வெங்கடேசன் வெளியிட்டு உள்ள அறிவிப்பு:அண்ணா பல்கலையின் செமஸ்டர் தேர்வு மாற்றப்படவில்லை. ஒரு சில விருப்ப பாடங்களுக்கான, தேர்வு நாட்களில் மட்டும் மாற்றம் உள்ளது. அதை மட்டும் மாற்றி, புதிய கால அட்டவணை தரப்பட்டுள்ளது.தேர்வு துவங்கும் என, அறிவிக்கப்பட்ட தேதியில் மாற்றமில்லை. எனவே, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அனைத்து இறுதி ஆண்டு மாணவர்களுக்குமான, கடைசி செமஸ்டர் தேர்வு, வரும், 24ம் தேதி முதல், 26ம் தேதிக்குள் திட்டமிட்டபடி நடக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்வுக்கான கட்டுப்பாடுகள் வருமாறு: தேர்வர்கள் எங்கிருந்தாலும், இந்திய நேரப்படி தேர்வு துவங்கும். 'மொபைல் போன், லேப்டாப்' மற்றும் கணினி என, தேர்வு எழுத உள்ள கருவியை, இடையில் மாற்ற கூடாது. தேர்வர்கள் உள்ள அறையில், வேறு யாரும் இருக்க கூடாது. 'டிவி' ரேடியோ, பிற நபர்கள் என, எந்த சத்தமுமின்றி அமைதியாக இருக்க வேண்டும். அதை செயற்கை நுண்ணறிவு திறன், 'சாப்ட்வேர்' ஆய்வு செய்யும்.
தேர்வின் போது, முகக் கவசம் அணிய வேண்டாம். கேமராவில், தேர்வர் முகம் தெளிவாக தெரியும் வகையில், வெளிச்சமான இடத்தில் இருக்க வேண்டும். புத்தகம், கணினியை பார்ப்பது, பிறரிடம் கேட்டு எழுதுவது போன்ற முறைகேடு கூடாது.இவ்வாறு, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog