தமிழகத்தில், தற்போது நடைமுறையில் உள்ள, தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு உத்தரவு, அக்டோபர், 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பள்ளிகள் திறப்பு அறிவிப்பை, அரசு வாபஸ் பெற்றது.
தமிழகத்தில், ஊரடங்கு உத்தரவு, இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. எனவே, ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதன்பின், அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுதும், தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள, பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், அக்., 31 நள்ளிரவு, 12:00 மணி வரை, நீட்டிக்கப்படுகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியம், நோய் தொற்றின் தன்மை ஆகியவற்றை கருத்தில் வைத்து, நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர, மற்ற பகுதிகளில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தளர்வுகளுடன், மேலும் சில பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
* உணவகங்கள் மற்றும் டீக்கடைகள், காலை, 6:00 முதல், இரவு, 9:00 மணி வரை இயங்கலாம். பார்சல் சேவை, இரவு, 10:00 மணி வரை உண்டு.
* படப்பிடிப்புகளில் ஒரே சமயத்தில், 100 பேருக்கு மிகாமல் பணி செய்யலாம்; பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
* வெளி மாநிலங்களில் இருந்து, இனி, 100 விமானங்கள் வரை, சென்னையில் தரையிறங்க அனுமதி அளிக்கப்படும். கோவை, திருச்சி, மதுரை, துாத்துக்குடி, சேலம் நிலையங்களில், விமானங்கள் தரையிறங்க, தற்போதைய நிலை தொடரும்.
* ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள, வார சந்தைகள் மட்டும் செயல்படலாம்.தொடரும் தடைகள்.
* பள்ளிகள், கல்லுாரிகளுக்கு தடை தொடரும்.
* திரையரங்குகள், நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்கா, கடற்கரை, அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கு தடை நீடிக்கும்.
* மத்திய அரசு அனுமதித்ததை தவிர, சர்வதேச விமான போக்குவரத்து கிடையாது* புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து கிடையாது.
* பொது இடங்களில், ஐந்து நபர்களுக்கு மேல் கூடக்கூடாது
.
* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், எந்தவிதமான தளர்வுகளுமின்றி, ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
ல
பள்ளிகள் திறப்பு இல்லை
மத்திய அரசு வெளியிட்ட ஆணைகளின்படி, தமிழகத்தில், நாளை முதல், அரசு பொதுத் தேர்வு எழுதும், பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், சுய விருப்பம் அடிப்படையில், பள்ளிகளுக்கு வரலாம். ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறியலாம் என, 24ம் தேதி, அனுமதி அளிக்கப்பட்டது.‛இது குறித்து, கவனமுடன் செயல்படலாம்' என, மாவட்ட கலெக்டர்களும், மருத்துவ நிபுணர் குழுவினரும் தெரிவித்தனர்.தற்போதுள்ள, கொரோனா நோய் பரவலின் தன்மை, மாணவர்கள் பாதுகாப்பு ஆகியவற்றை கருதி, பள்ளிகள் திறப்பு அனுமதி நிறுத்தி வைக்கப்படுகிறது. இது குறித்து, மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, உரிய நேரத்தில், அனுமதி வழங்கப்படும்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.
தேவைக்கேற்ப தளர்வுகள்!
அதிக தளர்வுகள் வழங்கிய நிலையிலும், நோய் தொற்று வேகம், மாநில அளவில் குறைந்துள்ளது. இறப்பு விகிதத்தை குறைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் வெளியில் செல்லும் போது, கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை, தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
அவசிய தேவையின்றி, வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தால் தான், இந்த நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்.திருமணம், வழிபாட்டு தலம், இறுதி ஊர்வலம், குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்திலும், அரசின் வழிமுறைகளை கடைப்பிடித்து, நோய் தொற்றை தவிர்க்க வேண்டும்.பொது மக்கள் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் வைத்து, தேவைக்கேற்ப, மேலும் தளர்வுகள் வழங்கப்படும் என, முதல்வர் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.