நீட் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததால் 70 மதிப்பெண் வரை கட்-ஆப் உயரும்: கல்வியாளர்கள் கருத்து - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 23, 2020

Comments:0

நீட் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததால் 70 மதிப்பெண் வரை கட்-ஆப் உயரும்: கல்வியாளர்கள் கருத்து

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததால் 70 மதிப்பெண் வரை கட்-ஆப் உயரும் என கல்வியாளர்கள் கருத்து ( பத்திரிகை செய்தி) நீட் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததால் நடப்பு ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான கட்-ஆப்சராசரியாக 60 முதல் 70 மதிப்பெண்வரை உயரக் கூடும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு முடிவுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட தேசியதேர்வு முகமை (என்டிஏ) திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நடப்புஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான கட்-ஆப், 70 மதிப்பெண் வரைஉயரும் என தெரிகிறது. இதுதொடர்பாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டு நீட் தேர்வு எளிதாக இருந்தது. மேலும் இந்த ஆண்டு மறுமுறை தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதனால் பெரும்பாலான மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெறுவார்கள். இவை கட்-ஆப் மதிப்பெண்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட்தேர்வில் மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில் 600-க்கு மேல் 143 பேரும், 550-க்கு மேல் 521 பேரும், 500-க்கு மேல் 1,383 பேரும் எடுத்தனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை கணிசமாக உயரும். அதாவது, 600-க்கு மேல் 250-க்கு மேற்பட்டோரும், 550-க்கு மேல் 700-க்கு மேற்பட்டோரும், 500-க்கு மேல் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களும் மதிப்பெண் பெறக் கூடும். தமிழகத்தில் தற்போதுள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்தவே இந்திய மருத்துவக் குழுமம் (எம்சிஐ) அனுமதித்துள்ளது. அதன் அடிப்படையில் ஆராய்ந்தால் இந்த ஆண்டு கலந்தாய்வில் சராசரியாக 60 முதல் 70 வரை கட்-ஆப் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஓசி பிரிவுக்கு 590-க்கு மேலும், பிசி வகுப்புக்கு 540-550 வரையும், பிசி (முஸ்லிம்) பிரிவுக்கு 520-525,எம்பிசிக்கு 500-க்கும் கூடுதலாகவும், எஸ்சி வகுப்புக்கு 435-440, எஸ்டி பிரிவுக்கு 330-340 வரையும் கட்-ஆப் அமையும். அதேநேரம் தமிழக அரசு புதிதாகதொடங்கியுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு எம்சிஐ அனுமதி வழங்கிவிட்டால் நமக்கு கூடுதலாக 1,250 இடங்கள் கிடைக்கும். அவை கலந்தாய்வில் சேர்க்கப்பட்டால் கட்-ஆப் 30 முதல் 40 மதிப்பெண் வரை மட்டுமே உயரும். ஓசி வகுப்புக்கு 550-560 வரையும், பிசி பிரிவுக்கு 500-510, பிசி (முஸ்லீம்) வகுப்புக்கு 490-500, எம்பிசிக்கு 465-475, எஸ்சி பிரிவுக்கு 390-400 மற்றும் எஸ்டி வகுப்புக்கு 300-310 மதிப்பெண் என்ற விகிதத்தில் கட்-ஆப் நிர்ணயிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மருத்துவக் கல்வி இயக்குநரகஅதிகாரிகளிடம் கேட்டபோது,‘‘நடப்பு ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதற்கேற்ப கட்-ஆப் மதிப்பெண்ணும் கணிசமாக உயரும். 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் எம்சிஐ நேரில் ஆய்வு செய்த பின்னரே மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கிடைக் கும்’’என்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews