சத்துணவு பணியாளர் நேரடி நியமன அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 27, 2020

Comments:0

சத்துணவு பணியாளர் நேரடி நியமன அறிவிப்பு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பத்திரிக்கை செய்தி (Press News)
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் சத்துணவு அமைப்பாளர்/சமையலர்/சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம்
ந.க.எண்.22864/2020/எக்ஸ்1
நாள்: 24.09.2020
கிருஷ்ணகிரி மாவட்டம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் கீழ்க்கண்டவாறு ஏற்பட்டுள்ள அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் (பெண்கள் மட்டும்) விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள் நகல்களுடன் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 26.09.2020 முதல் 09.10.2020 மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் தபால் மூலமாகவோ தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மானவே, 09.10.2020 மாலை 5.00 மணிக்கு பின்னர் பெறப்படும் வினாணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே நேர்முகத் தேர்விற்கு எடுத்துக்கொள்ளப்படும். மாதிரி விண்ணப்ப படிவங்கள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் 5.00 வரை பெற்றுக்கொள்ளலாம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட இணையதள முகவரி www.krishnagiri.nic.in என்ற முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரகத்திற்கு விண்ணப்பிக்க கூடாது. சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் / நகராட்சி அலுவலகத்திற்கு பட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் தெரிவிக்கப்படுகிறது.
அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளி சத்துணவு மையங்களுக்கு மட்டும் இனசுழற்சி முறை பின்பற்றப்படமாட்டாது. 1 சத்துணவு அமைப்பாளர் பதவிக்கான தகுதிகள்:-
1) கல்வித்தகுதி,
* பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* பழங்குடியினர் (ST) எட்டாவது வகுப்பு (தேர்ச்சி தோல்வி) வரை படித்திருக்க வேண்டும்.
2) வயது வரம்பு (Date of Notification) அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளன்றுள்ளபடி: * பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 21 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
* பழங்குடியினர் (ST) 18 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
* விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews