Breaking

Monday, September 21, 2020

6 மாதங்களுக்குப் பிறகு ஆந்திரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று பள்ளி திறப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆந்திரா, அசாம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் முதலாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு கடந்த சில மாதங்களாக இணையதளம் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், இந்த பொதுமுடக்கத்தில் அருகில் மத்திய, மாநில அரசுகள் கடந்த ஜூலைமாதம் முதலாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், பள்ளிகளை பகுதி நேரமாக திறப்பதற்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்தது. இதன்படி, சில மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகள் திறக் கப்படவுள்ளன. குறிப்பாக, ஆந்திரா, அசாம், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர் களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமூகஇடைவெளியை கடைபிடிக்கு மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேம் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது எனவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத், பிஹார், மேற்குவங்கம், கர்நாடகா, உத்தராகண்ட், கேரளா ஆகிய மாநிலங்கள் இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படமாட்டாது என அறிவித்துள்ளன. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog