அண்ணா பல்கலைக்கழகம் தனது 13 உறுப்பு கல்லூரிகளின் கல்விக் கட்டணம் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுஇம்மாத இறுதியில் நடைபெறஉள்ளது. இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதி அண்ணா பல்கலை. தனது 13 உறுப்பு கல்லூரிகளின் கல்விக் கட்டணம் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உறுப்பு கல்லூரிகளில் பருவ அடிப்படையில் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, மாணவர் சேர்க்கையின்போது ரூ.4,810, வைப்பு நிதியாக ரூ.9 ஆயிரம், பருவத்துக்கான கல்வி கட்டணமாக ரூ.15 ஆயிரம் எனமொத்தம் ரூ.28,810-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு கல்வி ஆண்டுக்கான விடுதிகட்டணமாக ரூ.22,800, ஒரு பருவத்துக்கு மெஸ் கட்டணமாக ரூ.12ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள் ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.annauniv.edu-ல் அறிந்து கொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups