அனுப்புநர்
முனைவர்.சி.உஷாராணி,
எம்.எஸ்ஸி., பி.எட்., பிஎச்.டி.,
அரசுத் தேர்வுகள் இயக்குநர்,
சென்னை - 600 006.
பெறுநர்
அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி.
(முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழியாக)
நாள் : 11.09.2020 ந.க.எண். 125746/11/2020
ஐயா/அம்மையீர்,
பொருள் : அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6- 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு – வழங்குதல் – சார்பு. பார்வை :
1. இவ்வலுவலக கடித நாள்.14.02.2020 மற்றும் 18.02.2020.
2. இவ்வலுவலக கடித ந.க.எண்.127311/எச்.1/2019, நாள்.19.08.2020.
****** அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும், 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர் பட்டியல் தயாரிக்க போதுமான கால அவகாசமும், அதன் பிறகு பார்வை 1-ல் காண் கடிதத்தின் வாயிலாக பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இரண்டு முறை வாய்ப்புகளும் அரசுத் தேர்வுத் துறையால் வழங்கப்பட்டன. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட்டப்பட்ட பின்னரும் பெயர்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு கடைசி வாய்ப்பு என பார்வை 2-ல் காணும் இவ்வலுவலக கடிதத்தின் வாயிலாக வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, சில பள்ளிகளிலிருந்து பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கோரி இவ்வலுவலகத்தில் கடிதங்களும், தொலைபேசி வாயிலாக கோரிக்கைகளும் வந்தவண்ணம் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இது போன்று பலமுறை பள்ளி மாணவர்களது பெயர் பட்டியலில் திருத்தங்கள் வழங்க வாய்ப்பளித்தும், மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பின்னர் மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரி கடிதம் பெறப்படுவது வழக்கமான நிகழ்வாக உள்ளது. மாணவர்களது நலன் கருதி பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுவதற்காக வழங்கப்படும், இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு, மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்யக்கோரி இவ்வலுவலகத்தில் மனுக்கள் பெறப்படின், அரசின் நிதிச்செலவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரை செய்யப்படும் என்ற அறிவிப்போடு, அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 14.09.2020 முதல் 15.09.2020 வரை இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் பிழையில்லா விவரங்களுடன் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஓம்/-
இயக்குநர் நகல்
1. அனைத்து மாவட்டக் முதன்மைக் கல்வி அலுவலர்கள்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் இக்கடிதத்தினை அனுப்பி வைக்குமாறும், இப்பணி தொடர்பாக பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
2. இணை இயக்குநர் (கல்வி), புதுச்சேரி.
3. அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள்.
4. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U