தமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 26ம் தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது.
தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத்துறையில் காலியாக உள்ள 10 ஆயிரத்து 906 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு குழுமம் நேற்று வெளியிட்டது. இது தவிர 72 பின்னடைவு காலி பணியிடங்கள்( ஆயுதப்படை 62(பெண்கள்), சிறைத்துறை 10 (பெண்கள்) இடங்களும் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 10,978 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியினை பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாவர். அது மட்டுமல்லாமல் விண்ணப்பத்தாரர் 10ம் வகுப்பில் தமிழை ஒரு மொழி பாடமாக படித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்போர் 1.7.2020 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்(1.7.2002 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்தவராகவே, 1.7.1996 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்தவராகவோ இருத்தல் வேண்டும்).
விண்ணப்பிப்போர் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதர வழியில் விண்ணப்படிவம் மற்றும் தட்டச்சு படிவம் மூலமாக விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இணையவழி வாயிலாக வருகிற 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அடுத்த மாதம் அக்டோபர் 26ம் தேதி கடைசி நாள் ஆகும். எழுத்து தேர்வு டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. எழுத்து தேர்வு 37 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வு 1 மணி 20 நிமிடங்கள் வரை நடைபெறும். எழுத்து தேர்வில் தகுதி மதிப்பெண்ணாக குறைந்த பட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும். எழுத்து தேர்வில் 80 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும்.
அதில் பொது அறிவில் 50 மதிப்பெண்களும், உளவியலில் 30 மதிப்பெண்ணுக்கும் வினாக்கள் கேட்கப்படும். வினாக்கள் கொள்குறி வகையில் இடம் பெற்றிருக்கும். உடற் திறன் போட்டிக்கு 15 மதிப்பெண் வழங்கப்படும். சிறப்பு மதிப்பெண்கள் 5 என மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். உடல் தகுதி தேர்வில் ஆண்கள் 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். பெண்கள் மற்றும் திருநங்கைகள் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 30 விநாடிகளில் ஓடி முடிக்க வேண்டும். உடல் திறன் போட்டிகளில் ஆண்கள் கயிறு ஏறுதல். நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல். 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம் ஓட வேண்டும்.
பெண்கள் நீளம் தாண்டுதல். கிரிக்கெட் பந்து ஏறிதல் அல்லது குண்டு ஏறிதல்(4 கிலோ). 100 மீட்டர் அல்லது 200 மீட்டர் ஓட்டம் ஓட வேண்டும். மேலும் முழுமையான உடற்திறன் போட்டிகளுக்குரிய தகுதி விவரங்கள் போன்ற தேர்வுக்கான முழு விவரங்கள் அடங்கிய தகவல்களை www.tnusrbonline.org இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 1.30 லட்சம் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தற்போது 1.30 லட்சம் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.