10,906 காவலர் பணிக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்றுமுதல் ஆரம்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 27, 2020

Comments:0

10,906 காவலர் பணிக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்றுமுதல் ஆரம்பம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வகையில் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தமிழக காவல்துறையில் ஓய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காலியாகும் பணியிடங்களுக்காக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆயுதப்படை, சிறப்புக் காவல்படை, சிறைத்துறை, தீயணைப்புத் துறைக்கு எனத் தனித்தனியாகத் தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் செப்டம்பர் 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 26 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 13-ல் எழுத்துத் தேர்வு நடக்கும். இந்த எழுத்துத் தேர்வு மாவட்டவாரியாக நடக்கும். மொத்த எழுத்துத் தேர்வு 1.20 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படுவார்கள். ஆயுதப்படை 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு 3,784 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஆண்கள்-685 பேர், பெண்கள்-3,099 பேர் தேர்வு செய்யப்படுவர். ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட பிரிவினருக்குத் தேர்வு நடைபெறும். தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 2-ம் நிலைக் காவலர் பதவிக்கும் இதேபோன்று 6,545 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஆண்கள் மட்டும் 6,545 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். சிறைத்துறையில் 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு 119 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். (இதில் ஆண்கள் 107 பேர், பெண்கள் 12 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்) தீயணைப்புத் துறையில் தீயணைப்பாளர் பணியிடத்துக்கு 458 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். (முழுவதும் ஆண்கள் 458 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்) அனைத்துப் பதவிகளுக்கும் இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்புத் தேர்ச்சி ஆகும். மொழிப் பாடம் தமிழ்ப் பாடமாக இருக்க வேண்டும். 10-ம் வகுப்புக்கு மேல் படித்துள்ள யாரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் இணைக்கல்வித் தகுதிக்கான சான்றிதழ் ((equivalent certificate) விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்விதம் பதிவேற்றம் செய்யத் தவறினால் உரிய கல்வித் தகுதியாக ஏற்றுக்கொள்ள இயலாது. சம்பள விகிதம் ரூ.18,200 - 52,900 வயது, தகுதி
விண்ணப்பதாரர் 01-07-2020 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 24 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். 01-07-2002 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்தவராகவோ 01-07-1996 அன்று அல்லது அதற்குப் பின்னர் பிறந்தவராகவோ இருத்தல் வேண்டும். சில பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கீழ்க்கண்டவாறு அளிக்கப்பட்டுள்ளது. ஜெனரல் கோட்டா: 18-24 வயது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் 18-26 வயது. பட்டியலினத்தவர் 18-29 வயது மூன்றாம் பாலினத்தவர் 18-29 வயது ஆதரவற்ற விதவைப் பெண்கள் 18-35 வயது முன்னாள் ராணுவத்தினர் 18-45 வயது விண்ணப்பம், விண்ணப்பக் கட்டணம், தேர்வு நாள், தேர்வுகள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் கீழ்க்கண்ட தேர்வு வாரிய இணைப்பில் காணலாம்.
https://tnusrbonline.org/pdfs/CR_2020_Notification.pdf 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews